பணப்பெட்டியுடன் வந்த கானா வினோத்... மனைவி என்ன சொல்லியிருக்கிறார்னு தெரியுமா?
பிக்பாஸ் வீட்டில் கானா வினோத் பணப்பெட்டியுடன் வெளியேறிய நிலையில், அவரது மனைவி பதிவிட்டுள்ள இன்ஸ்டா பதிவு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பணப்பெட்டி டாஸ்க் இந்த வாரம் நடைபெற்றுள்ளது.
தற்போது 6 போட்டியாளர்கள் உள்ளே விளையாடி வந்த நிலையில், அரோரா நேரடியாக முதல் பைனலிஸ்ட் டிக்கெட்டை பெற்று பெற்றுச் சென்றார்.

சக்தி, விக்ரம், அரோரா இவர்களில் ஒருவர் பணப்பெட்டியை எடுப்பார்கள் என்று எதிர்பார்த்த தருணத்தில் கானா வினோத் எடுத்துள்ளார்.
வினோத் பணப்பெட்டியை எடுத்த உடனே அனைவரும் கட்டிப்பிடித்து அழுதுள்ளனர். தான் விளையாடியதற்கு இதுபோதும்டா.... இதுவே தனக்கு கோடிக்கு சமம் என்று கூறினார்.
பிக்பாஸும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து வினோத்தை பெருமைப்படுத்தினார். இந்த லட்சங்கள் கோடிகளாக மாறும் நாள் ரொம்ப தூரத்தில் இல்லை என்று கூறி வழியனுப்பியது பார்வையாளர்களையே சோகத்தில் ஆழ்த்தியது.

மனைவியின் கருத்து
வினோத் இவ்வாறு பணப்பெட்டியுடன் வெளியேறியதை மக்களும் ஆதரித்துள்ளனர். ஏனெனில் 95 நாட்கள் இருந்ததற்கான சம்பளம் மற்றும் கூடுதலாக இந்த 18 லட்சம் கிடைத்துள்ளது, அவரது குடும்பத்திற்கும், பிள்ளையின் எதிர்காலத்திற்கும் உதவும் என்று கூறுகின்றனர்.
ஆனால் ஒரு சிலர் சற்று காத்திருந்தால் டைட்டில் கிடைத்திருக்குமே... என்று கூறுகின்றனர். சிலர் அரோரா டைட்டில் வின்னர் ஆவதற்கு தகுதி இல்லாத நபர் என்றும் அவருக்கு கிடைத்தால் தவறான முன்னுதாரணம் என கூறுகின்றனர்.

கானா வினோத்தின் வெளியேற்றம் குறித்து மனைவி பதிவிட்டுள்ள இன்ஸ்டா ஸ்டோரி ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. "வினோத் மீது நீங்கள் காட்டும் அன்பு தான் பெரிய விருது. அன்பில் என்னையே முந்திட்டீங்க... அந்த அன்பை விட டைட்டில் பெருசா?" என அவர் கண் கலங்கியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |