Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம்
பிக்பாஸ் வீட்டில் கானா வினோத் திடீரென பணப்பெட்டியை எடுத்து அனைத்து போட்டியாளர்களையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளார்.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பணப்பெட்டி டாஸ்க் இந்த வாரம் நடைபெற்றுள்ளது.

தற்போது 6 போட்டியாளர்கள் உள்ளே விளையாடி வந்த நிலையில், அரோரா நேரடியாக முதல் பைனலிஸ்ட் டிக்கெட்டை பெற்று பெற்றுச் சென்றார்.

மீதம் இருந்த சக்தி, அரோரா, திவ்யா, சாண்ட்ரா, வினோத் ஆகிய ஐந்து பேர் நேரடியாக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பணப்பெட்டி டாஸ்கில் யார் எடுக்கப் போகின்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சக்தி, விக்ரம், அரோரா என அடுத்தடுத்து போட்டியாளர்களை யூகித்த நிலையில், தற்போது யாரும் எதிர்பாராத தருணத்தில் கானா வினோத் எடுத்துள்ளார்.

காலையிலேயே இந்த தகவல் வெளியான நிலையில், ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்தவொரு காட்சியும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் வினோத்தின் வெளியேற்றம் ப்ரொமோவாக வெளியாகி பார்வையாளர்களையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது பணப்பெட்டியை எடுத்த உடனே அனைவரும் வினோத்தை கட்டிப்பிடித்து அழுதுள்ளனர். வினோத்தும் கதறி அழுதுள்ளார். தான் விளையாடியதற்கு இதுபோதும்டா என்று கூறியுள்ளார்.

மேலும் இதுவே தனக்கு கோடிக்கு சமம் என்று கூறினார். பிக்பாஸும் வினோத்தை வெல் பிளே வினோத் என்று கூறி பெருமைப்படுத்தியதுடன், இந்த லட்சங்கள் கோடிகளாக மாறும் நாள் ரொம்ப தூரத்தில் இல்லை என்று கூறி வழியனுப்பியுள்ளது ஒட்டுமொத்த போட்டியாளர்கள், பார்வையாளர்களை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |