கம்ருதின், பாரு திருமணத்திற்கு கானா வினோத் கொடுக்கும் பரிசு என்ன தெரியுமா?
பிக்பாஸ் வீட்டிலிருந்து பணப்பெட்டியுடன் வெளியேறிய கானா வினோத் நண்பன் கம்ருதின் திருமணத்திற்கு கொடுக்கும் பரிசு குறித்து நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பணப்பெட்டியுடன் வெளியேறிய கானா வினோத் ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலமாகி வருகின்றார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் 24 போட்டியாளர்களில் ஒருவராகிய இவர், விளையாடிய விதம், அட்டகாசமான காமெடி பேச்சு அனைத்தும் ரசிகர்களை அதிகமாகவே கவர்ந்தது.

அதுமட்டுமின்றி கம்ருதின், வினோத் இடையேயான நட்பு வேற லெவலில் வெளியே ரீச் ஆகியது. ஆனால் கம்ருதின் பார்வதியிடம் பேசுவதை பிடிக்காததால், இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதமும் எழுந்தது.
பார்வதி வெளியே செல்வதற்கு முன்பு கூட கானாவினோத்திற்கும், பாருவிற்கும் பயங்கர சண்டை ஏற்பட்டது. கம்ருதினை பார்வதியுடன் சேராதே என்று கானா வினோத் நேரடியாக பலமுறை கூறியுள்ளார்.
கொடுக்கும் பரிசு என்ன?
இந்நிலையில் கம்ருதின் கானா வினோத்தை வீட்டிற்கு சென்று சந்தித்து எடுத்தக் கொண்ட புகைப்படம் வைரலாகியது. தற்போது பார்வதி மீதுள்ள கோபம் சற்று குறைந்துள்ளது என்றே கூறலாம்.
நேர்காணல் ஒன்றில் பேசிய கானாவினோத், உள்ளே இருக்கும் போது ஒருவர் முகத்தை தான் மற்றவர் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆதலால் ஒருமுறை கோபம் ஏற்பட்டாலும் மறுமுறை பார்க்கும் போது பாசம் ஏற்பட்டுவிடும் என்றார்.

மேலும் கம்ருதினுக்கு பார்வதி மீது காதல் ஏ்றபட்டுவிட்டது. இதனை நாம் என்ன கூறினாலும் தடுக்கவே முடியாது. காதல் அவ்வளவு சக்திவாய்ந்தது என்று நம் எல்லாருக்குமே தெரியும் என்றார்.
தொகுப்பாளர் 6 மாதம் கழித்து கம்ருதின் உங்ககிட்ட வந்து மச்சான், பாருக்கும் எனக்கும் கல்யாணம் நடக்கப்போகுது என்று கூறினால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு கானா வினோத் ஒரு ஆயிரத்து ஒரு ரூபாயை மொய் வைத்து சாப்பிட்டு வருவேன் என்று கலக்கலாக பதில் அளித்துள்ளார்.
பின்பு சற்று சிரித்துக் கொண்டு வேற என்ன பண்றது? ஆனால் கொஞ்சம் அதிகமாகத் தான் வைப்பேன்... சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன் என்று கூறி சிரிக்க வைத்துள்ளார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |