இன்று 54 மணி நேர கஜகேசரி யோகம் ஆரம்பம்: 12 ராசிகளில்.. யாருக்கு திடீர் யோகம்?
பஞ்சாங்கத்தின்படி இன்று காலையில் சந்திரன் குருவுடன் இணைந்து கஜகேசரி யோகத்தை உருவாக்கி உள்ளார். இதனால் சில ராசிகள் தலைவிதி மாறப்போகின்றது.
கஜகேசரி யோகம்
ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சியும் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. இது பெரும்பாலும் 12 ராசிகளில் தாக்கத்தை உண்டாக்கும். அதன்படி 54 மணிநேர கஜகேசரி யோகம் உருவாக உள்ளது.

பிப்ரவரி 26 ஆம் தேதி அதிகாலை 12:54 மணிக்கு சந்திரன் மிதுன ராசியில் பெயர்ச்சி அடைந்துள்ளார், குருவுடன் இணைந்து கஜகேசரி ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார்.
இந்த யோகம் 54 மணி நேரம் வரை நீடிக்கும். பிப்ரவரி 28 ஆம் தேதி அதிகாலை 3:52 மணிக்கு சந்திரன் கடக ராசிக்குள் பயணத்தை தொடங்குவார்.
இந்த 54 மணிநேரத்திற்கு சில ராசிகள் பல நன்மைகளை பெறப்போகின்றனர். அவர்கள் எந்த ராசியினர் என்பதை பார்க்கலாம்.

மேஷம்
- இந்த 54 மணி நேரத்தில் நிதி முன்னேற்றத்தை தரும்.
- தைரியம் அதிகரிக்கும்.
- எல்லா விடயத்திலும் பக்கவான முடிவை எடுப்பீர்கள்.
- முதலீட்டில் லாபம் மற்றும் தொழிலில் பதவி உயர்வு கிடைக்கும்.
- வீட்டில் ஏதாவது பெரிய பிரச்சனைகள் இருந்தால் அது முடிவிற்கு வரும்.
ரிஷபம்
- நிதி சம்பந்தமான புதிய வழிகள் பிறக்கும்.
- நீண்ட காலம் முடிக்கப்படாத வேலைகள் முடிவடையலாம்.
- பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கலாம்.
- தொழிலதிபர்கள் உங்களுடன் லாபம் வரக்கூடிய ஒப்பந்தங்களை கொடப்பார்கள்.
- வாழ்க்கையில் வசதிகளும் ஆடம்பரங்களும் அதிகரிக்கக்கூடும்.
மிதுனம்
- மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.
- சமூகத்தில் மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கும் வாய்ப்பு உங்களுக்கு அதிகம் உள்ளது.
- நீங்கள் சிந்திக்கும் விடயம் நேர்மறையாக அமையும்.
- திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- உங்களுடைய ஆளுமை பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
கடகம்
- கடக ராசி காரர்களுக்கு கௌரவம் அதிகரிக்கும்.
- சமூகத்தில் ஒரு புதிய அடையாளத்தை நிலைநாட்டுவீர்கள்.
- குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.
- வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.
- மன நிம்மதியும் பலரால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையும் உருவாகும்.
கன்னி
- இந்த கஜகேசரி யோகம் கன்னி ராசிக்காரர்களுக்கு நன்மை கொடுக்கும்.
- வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றத்தை கொடுக்கும்.
- தொழிலதிபர்கள் ஒரு பெரிய லாபத்தை பெறக்கூடிய ஒப்பந்தத்தை பெறுவார்கள்.
- அவசர முதலீடுகளைத் தவிர்க்க வேண்டும்.
- சமூக வட்டம் விரிவடையக்கூடும்.
துலாம்
- துலாம் ராசிக்காரர்களின் தொழிலில் வெற்றியைத் தரும்.
- நிங்கள் புதிய தொழிலைத் தொடங்கலாம்.
- மனைவியுடனான உங்கள் உறவு மகிழ்ச்சியாக மாறும்.
- திடீர் நிதி ஆதாயம் பெறலாம்.
- குறிப்பிட்ட விடயங்களில் நீங்கள் அவதானமாக செயற்பட்டால் வெற்றி உறுதி.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).