குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலட்சுமி ராஜ யோகம் : இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
ஜோதிட ரீதியில் கிரகங்களின் பெயர்ச்சியானது ராசிபலன் கணிப்பில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. காரணம் நவகிரகங்களின் நிலையில் ஏற்ப்படும் மாற்றமானது அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியாகவே ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்தவகையில், அசுரர்களின் குருவாக கருதப்படும் ஆடம்பரத்தின் கிரகமான சுக்கிரன் தற்போது தனது சொந்த ராசியான ரிஷப ராசியில் நுழைந்து, மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். அதே வேளையில் ரோகிணி நட்சத்திரத்திலும் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் மே 14, 2026 அன்று, குருபகவான் மற்றும் சுக்கிரன் ஆகிய இரண்டு கிரகங்களும், இணைந்து 'கஜலட்சுமி ராஜயோகம்' என்று அழைக்கப்படும் ஒரு சக்திவாய்ந்த ராஜயோகத்தை உருவாக்கப்போகின்றன.
அதன் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக பாதக தாக்கத்தை ஏற்படுத்தினாலும் நிதி மற்றும் தொழில் ரீதியில் உச்சகட்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு குரு சுக்கிரனால் உருவாகும் ராஜயோகம் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பாரியளவில் சாதக திருப்பங்களை கொடுக்கும்.
குறிப்பாக நீண்ட கால கடன் பிரச்சினைகளுக்கு முடிவுகட்டும் அளவுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி காணப்படும்.
சுக்கிரன் ஆசியால் திருமணம் மற்றும் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், குரு ஆசியால் பொன்பொருளும் குவியப்போகின்றது.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த யோகமானது பல வழிகளிலும் வெற்றிக்கான வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்கும்.
புதிய தொழில் தொடங்க வேண்டும் என்று நீண்டகாலம் போராடி வந்தவர்களுக்கு இந்த காலகட்டத்தில் அதற்கான வாய்ப்புகள் தானாக உருவாகும்.
சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணியி்டத்தில் உங்களுக்கான அங்கீகாரத்தையும் கொடுக்கப்போகிறது.
தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியடைவார்கள். தம்பதியினருக்கு இடையில் நெருக்கம் அதிகரிக்கும்
சுக்கிரன் மற்றும் குரு ஆசியால் வாழ்வில் செல்வ செழிப்புக்கு பஞ்சமே இருக்காது. இந்த யோகத்தால் அவர்கள் வணிகம் மற்றும் வேலையில் பெரிய வெற்றியை எதிர்பார்க்கலாம்.
பணியிடத்தில் சக ஊழியர்களுடன் இருந்துவந்த முறன்பாடுகள் நீங்கி சுமூகமான சூழல் உருவாகும். தொழில் ரீதியில் அமோக முன்னேற்றம் இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |