மிஸ் இண்டர்நேஷனல் குயின் அழகிப்பட்டத்தை வென்ற திருநங்கை - குவியும் வாழ்த்துகள்
மிஸ் இண்டர்நேஷனல் குயின் அழகிப்பட்டத்தை திருநங்கை வென்றதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
திருநங்கைகளுக்கான மிகவும் பிரசித்து பெற்ற மிஸ் இண்டர்நேஷனல் குயின் என்ற அழகிப்போட்டி கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது.

இதனிடையே, இந்த ஆண்டுக்கான தாய்லாந்து நாட்டில் உள்ள பட்டாயா நகரில் நடத்தப்பட்ட அழகிப்போட்டியில், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஃபுஷியா அன்னே ரவேனா (Fuschia Anne Ravena) என்பவர், மிஸ் இண்டர்நேஷனல் குயின் அழகிப்பட்டத்தை வென்றுள்ளார்.

மேலும், 22 அழகிகள் கலந்து கொண்ட இறுதி சுற்றில் கொலம்பியா மற்றும் பிரான்ஸ் நாட்டு அழகிகள் 2 மற்றும் 3-வது இடத்தை தட்டி சென்றுள்ளனர்.
இதுகுறித்து குயின் பட்டத்தை வென்ற ஃபுஷியா அன்னே ரவேனா தெரிவிக்கையில், “மக்கள் மத்தியில் அன்பு, அமைதி மற்றும் ஒற்றுமையைப் பரப்புவதற்காக செயல்படுவேன்.

அதனால், சமத்துவத்தின் முக்கியத்துவத்தை பரப்புவேன். நாம் அனைவரும் ஒரே வானத்தின் கீழ் வாழ்கிறோம். ஒரே காற்றை சுவாசிக்கிறோம்.
பல வேறுபாடுகளுக்கு மத்தியில் வாழும் போதிலும், நம் அனைவருக்கும் கிடைக்கும் காதல் என்பது உலகளாவியளவில் ஒரே விஷயமாக இருக்கிறது” எனக்கூறியுள்ளார்.