போட்டோவுக்காக கீழே விழுந்து மண்ணை வாரிய தம்பதிகள்! வைரல் வீடியோ
திருமணத்தின் போது வித்தியாசமாக புகைப்படம் எடுப்பதற்காக முயற்சித்து மணமக்கள் இருவரும் மண்ணை கவ்விய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமண வாழ்க்கை
பொதுவாக திருமணம் என்றாலே அனைவரது வாழ்க்கையிலும் முக்கியமான நிகழ்வாகும்.
இதன்போது எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் நமது வாழ்நாள் முழுவதும் நம்முடன் இணைந்து பயணிக்கிறது.
இதன்படி, குறித்த மணமக்கள் இருவரும் பராம்பரிய முறையில் திருமணம் முடிந்த பின்னர் ரொமான்டிக்காக போட்டோ எடுக்க முயற்சித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இருவரும் சுழற்சி முறையில் சுற்றிவிட்டு கீழே குனியும் போது மணமகளின் லகங்கா சிக்கியதால் இருவரும் கீழே விழுந்துள்ளனர்.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியைjaipur_preweddings என்பவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் இது தேவையா என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.