மேடையில் உன்னி மேனன் குரலில் பாடி அசத்திய இளம்பெண்.. பார்த்து மெய்சிலிர்த்த நெட்டிசன்கள்
சமூக வலைத்தளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே சிலர் வித்தியாசமான செயல்களை செய்து வருகிறார்கள்.
இதன்படி, இளம் பெண்ணொருவர் ஆண், பெண் என இருவரின் குரலிலும் மாறி மாறி மேடையில் பாடல் பாடுகிறார்.
இவரின் திறமையை கண்டு அங்கிருந்தவர்கள் மட்டுமல்ல இணையவாசிகளும் மிரண்டு போயுள்ளனர்.
கவிஞர் வைரமுத்து எழுதிய புது வெள்ளை மழை.. பாடலில் “பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூ கேட்பதில்லை” என்ற வரிகளையே இந்த பெண் பாடியுள்ளார்.
இந்த பாடலை ஏ. ஆர். ரகுமான் இசையமைக்க பாடகர் உன்னி மேனன் மற்றும் பாடகி சுஜாதா மோகன் பாடியுள்ளனர். அவர்களின் குரலில் ஒரே பெண் இந்த பாடலை பாடுவது சற்று வியப்பாகவுள்ளது.
காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் 36 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். அத்துடன் நூறுக்கும் மேற்பட்டோர் தங்களின் விருப்பங்களையும் தெரிவித்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |