கழுத்தில் மலைப்பாம்புடன் புகையிரதத்தில் பயணித்த நபர்! அச்சத்தை உண்டாக்கும் வீடியோ
பலர் பொது இடங்களில் பாம்புகளை கொண்டுசெல்வது மிகவும் பாதுகாப்பற்றது என்று கருதுகின்றனர். இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள வீடியொ ஒன்றில் ஒரு மனிதன் மலைப்பாம்புடன் அமர்ந்திருப்பதைக் காணலாம், ஒன்று அவரது மடியிலும், மற்றொன்று அவரது கழுத்தில் சுற்றிக் கொண்டும் இருக்கிறது.
வைரல் வீடியோ
பொதுப் போக்குவரத்தில் ஒரு நபர் மலைப்பாம்புகளை எடுத்துச் செல்லும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஒரு வேளை இந்த நபர் இந்த பாம்புகளை செல்லப்பிராணியாக எடுத்து சென்றிருக்கலாம்.
இந்த மலைப்பாம்புகள் தங்களது உடலை அசைத்தபடி, உரிமையாளரிடம் அதன் தலையை உயர்த்திக் கொண்டு செல்வதைக் காணலாம்.
மேலும், இந்த நபரை சுற்றியிருப்பவர்களில் பெரும்பாலோர் கவலைப்படாதவர்களாக காணப்பட்டாலும், ஒரு பெண் மட்டும் கவலையுடன் காணப்படுகிறார். இருப்பினும், அவர் எதுவும் செய்யாமல், அமைதியாக இருக்க முயற்சி செய்வதும் வீடியோவில் தெரிகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |