காகத்திடம் வியாக்கியானம் பேசிய பூனை..மிரண்டு போன பார்வையாளர்கள்
காகத்திடம் வியாக்கியானம் பேசிக் கொண்டு அமர்ந்திருந்த பூனையின் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக சமூக வலைத்தளங்களில் தினமும் ஒரு வீடியோக்காட்சி ட்ரெண்டாவது வழமை.
இது போன்ற காட்சிகளை பார்க்கும் போது 5 அறிவு படைத்த இந்த விலங்குகள் இவ்வளவு சந்தோசமாக இருக்கும் போது நம்மாள் முடியவில்லையே என நினைக்க வைக்கின்றது.
அந்த வகையில் வீட்டில் பின்புறமாக பூனையொன்று அமர்ந்திருக்கின்றது.
வியாக்கியானம் பேசும் பூனை
அப்போது அந்த பக்கமாக சென்ற காகம் வந்து அமர்ந்து கரைகின்றது. இதனை பார்த்த குறித்த பூனை மியாவ் மியாவ் என அதற்கு தெரிந்த மொழியில் காகத்திற்கு பதில் கூறுகின்றது.
இதனை பார்க்கும் போது மனிதர்கள் இருவர் பேசிக் கொண்டிருப்பது போன்று இருக்கின்றது.
காகம் கரைய கரைய பூனையும் கத்திக் கொண்டே இருக்கின்றது. இந்த காட்சியை டிடிசிவி கேமராவில் பதிவு செய்து டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்கள்.
இதனை பார்த்த இணையவாசிகள், “ என்ன அழகாக அமர்ந்து வியாக்கியானம் பேசுது பாருங்க..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
What are they talking about? ? pic.twitter.com/wg8Rr2FksU
— Buitengebieden (@buitengebieden) July 13, 2023