தற்கொலை செய்துகொள்ளும் ஆண் காகம்... கூட்டமாக கரைய இது தான் காரணமா?
மனிதன் தன் அன்றாட வாழ்வில் தினம் காணும் பறவை காகம். நமது இறந்த முன்னோரின் அம்சமாக காகங்கள் திகழ்வதாகவும், எனவே அவர்களின் நினைவு நாட்களில் காகத்துக்கு அன்னம் இடுவது வழக்கத்தில் உள்ளது.
இன்றைக்கும் கிராமப்புறங்களில், காகம் ஓயாது கரைந்தால், யாராவது விருந்தினர் வரப்போவதற்கான சகுனம் என்றும், ஏதோ நல்ல தகவல் வரப்போவதாகவும் பேசிக்கொள்வதைக் கேட்கலாம்.
இப்படியான நிலையில் காகம் பற்றிய சுவாரஷ்யமான தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
காகத்தின் ஆயுட்காலம் 4 வருடம்.
பெண் காகம், ஆண் காகத்தை நேசித்து அதாவது அண்டங்காக்கையுடன் உறவு வைத்து கூடு கட்டி தனது முட்டைகளை அடைக் காக்கும், அப்போது பெண் காகம் எக்காரணத்தை கொண்டும் கூட்டை விட்டு வெளியே போகாது.
பெண் காகத்திற்கு ஆண் காகம் தான் உணவு கொடுக்கும்.
அடை காக்கும் அந்த 40 நாட்களில் பெண் காகம் தண்ணீரே குடிக்காது.
முட்டையிலிருந்து குஞ்சிகள் வெளிவந்தவுடன் தனது துணையான ஆண் காகத்தை பெண் காகம் வெறுக்க ஆரம்பிக்கும், குஞ்சுகளுக்கு சிறகு முளைக்கும் வரை அதற்கு பெண் காகம் தான் இறை கொடுக்கும்.
ஆண் காகத்தை முழுமையாக வெறுத்து அதை கொத்தி கொத்தி விரட்டிவிடும், அதற்கு பிறகு ஆண் காகத்துடன் சேரவே சேராது.
இறுதியில் ஆண் காகத்திற்கு தனிமையே கிடைக்கும், தனிமையின் கொடுமையில் ஆண் காகம் மரக் கிளைகளில், அல்லது மின்சார கம்பிகளில், வாகனம்... தன்னைதானே காயப்படுத்திக்கொண்டு இறந்துவிடும்.
பறவை இனத்திலேயே தன் இனத்தின் ஒன்று இறந்தால் அதற்கு ஒப்பாரி வைக்கும் ஒரே பறவை காகம் மட்டும்தான். இது சமூகவலைத்தளத்தில் வைரலாக்க பரவி வரும் ஒரு பதிவு.