ஊரையே நடுங்க வைக்கும் காகம்: வெளியே வரமுடியாமல் தவிக்கும் மக்கள்! பின்னணி காரணம் என்ன?
கர்நாடக மாநிலத்தின் ஒரு கிராமத்தில் காகம் ஒன்று அங்குள்ள மக்களை எல்லாம் விரட்டி விரட்டி கொத்தி வரும் வினோத சம்பவம் நடந்து வருகிறது.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா தாலுகா பரமசாகரா அருகே இருக்கும் ஒப்லாபுரா கிராமத்தில் தான் இந்த வினோத சம்பவம் நடந்தேறிவருகிறது. இந்த ஒப்லாபுரா கிராமத்தில் இருக்கும் காகம் ஒன்று அப்பகுதியிலேயே பறந்து திரிந்து நடந்து செல்பவர்கள், மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்ளை விரட்டி, விரட்டி கொத்திவிட்டு பறந்து செல்கிறதாம்.
அதுமட்டுமில்லாமல் அப்பகுதியில் விளையாடும் சிறுவர்களையும் அந்த காகம் விட்டுவைக்காமல் கொத்தி கொத்தி விட்டு பறந்து சென்று விடுகிறதாம். இதன் காரணமாக அப்பகுதியில் இருக்கும் பெரும்பாலனவர்களுக்கு தலையில், முகம் உள்ளிட்ட இடங்களில் காகத்திடம் கொத்து வாங்கி காயத்துடன் காணப்படுகின்றனர்.
மேலும், இதுபோல அட்டகாசம் செய்யும் அந்த ஒற்றை காகத்தை பிடிக்க கிராமமே முயன்ற போதும் அவர்களால் அதனை பிடிக்க முடியவில்லை. இதனாலேயே அக்கிராமத்தில் இருக்கும் மக்கள் அந்த ஒற்றை காகத்திற்கு பயந்து கிராம மக்கள் தலையில் துண்டு கட்டி வெளியே செல்லும் பரிதாப நிலை உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்கும் போது, இந்த மாதிரியான நிகழ்வு கடந்த 6 மாதம் நடப்பதாக கிராம மக்கள் குமுறுகின்றனர். இந்த ஒற்றை காகம் எதற்காக இப்படி மக்களை கொத்துகிறது என்று கிராம மக்கள் ஆராய்ந்துள்ளனர்.
அப்போது தான் ஒப்லாபுரா கிராமத்தில் இருக்கும் சில மூத்த குடிமக்கள் கிராமத்தின் எல்லைப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் சாமி கோவிலில் பல்வேறு காரணங்களாக திருவிழா நடத்தப்படாமல் இருப்பதும், கும்பாபிஷேகம் நடத்தாமல் இருப்பதும் பற்றியும் கூறியுள்ளனர்.
ஒருவேளை ஆஞ்சநேயர் சாமி கோவிலில் விழா நடத்தாமல் இருப்பது தான் காகம் தாக்குவதற்கு காரணம் என நம்பி அக்கிராம மக்கள் கூடிய சீக்கிரம் கோவில் விழாவை நடத்தவும் முடிவு செய்துள்ளனர். இருப்பினும் திருவிழா வரை ஒற்றை காகம் விரட்டி விரட்டி கொத்துவதால் கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வர பயந்து போய் முடங்கி கிடக்கிறார்கள்.
இந்த கிராமத்தில் நடக்கும் இந்த விசித்திர சம்பவம் பக்கத்துக்கு கிராம மக்களை மட்டுமல்லாமல் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.