கடன் தொல்லை தலைக்கு மேல் வந்து விட்டதா? பௌர்ணமி நாளில் வரும் ஜாக்போட்
12 மாதங்களும் வரும் பௌர்ணமி நாளில் பல மாயங்கள் நடக்கும். ஆன்மீகத்துடன் மிகவும் நெருக்கமான நாளாக பார்க்கப்படும் இந்த நாளில் நேர்மறையான ஆற்றல்கள் அதிகமாக இருக்கும்.
தெய்வீக சக்தி நிறைந்திருக்கும் இந்நாளில், சிவபெருமான், முருகன், லட்சுமி தேவி, விஷ்ணு பகவான் போன்ற தெய்வங்களுக்கு கோயில்களில் விஷேட வழிபாடுகள் செய்யப்படும்.
இதன்படி, 2025 ஆம் ஆண்டின் கடைசி பௌர்ணமி இன்றைய தினம் வந்துள்ளது. இந்த நாளில் சுப காரியங்கள் செய்தால் அது நீடிக்கும் என ஜோதிடம் கூறுகிறது.
செல்வம், செழிப்புடன் வாழ நினைப்பவர்கள் இந்த நாளில் சில பரிகாரங்கள் செய்தாலே போதும்.
அதிலும் குறிப்பாக கடன் தொல்லை அதிகமாக இருப்பவர்கள் இந்நாளில் பரிகாரங்கள் செய்தால் நல்ல பலன் பார்க்கலாம். இது போன்ற வேறு என்னென்ன பரிகாரங்கள் செய்யலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.

செல்வத்தை குவிக்கும் பரிகாரம்
1. லட்சுமி தேவிக்கு பௌர்ணமி நாளில் அரிசி பருப்பு ஒன்றாக போட்டு பாயாசம் செய்து கொடுப்பது சிறந்தது. இந்த பரிகாரம் செய்யும் பக்தர்களுக்கு செல்வம் செழிப்பு அதிகமாக கிடைக்கும்.

2. பௌர்ணமி நாளில் நாணயம், பச்சை நிற மெழுகுவர்த்தி மற்றும் பிரியாணி இலை ஆகிய பொருட்களை எடுத்து, முதலில் மெழுகுவர்த்தியை ஏற்றி, பிரியாணி இலையில் "நான் ஒரு பண காந்தம்" என எழுத வேண்டும். அதனை ஒரு கண்ணாடி கிண்ணத்தில் வைத்து, அதற்கு மேல் நாணயத்தை வைக்கவும். இதனை நிலா வெளிச்சத்தில் இரவு முழுவதும் வைக்கவும். நாணயத்தை எடுத்து உங்கள் பையில் வைத்துக் கொள்ளவும். அதே போன்று பிரியானி இலையை அடுத்த நாள் எரித்து விட வேண்டும்.
3. பௌர்ணமி நாளில் கற்பனை பரிகாரம் செய்யலாம். நிதி இலக்குகளை கற்பனை செய்து விட்டு சிறிது நேரம் அமைதியாக இருக்கவும். இது உங்களை வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும். எப்போதும் உறுதியுடன் இருப்பது அவசியம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |