பழங்களை தோலுடன் சாப்பிட யோசிப்பவரா நீங்கள்? இதை முதல்ல படிங்க
நம்மில் பலரும் பழங்களை சாப்பிடும் போது அதன் தோலை நீக்கிவிட்ட பின்பு தான் சாப்பிடுகின்றோம். ஆனால் இவ்வாறு செய்வது சரியா என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
பழங்களை தோலுடன் ஏன் சாப்பிட வேண்டும்?
ஆப்பிள் பழத்தினை தோலுடன் சாப்பிட்டால் தான் முழு சத்துக்களும் கிடைக்கும். மேலும் நீரிழிவு மற்றும் இதய நோயாளிகளும் இவ்வாறே சாப்பிடவும்.
இதே போன்று கொய்யா பழத்தின் தோலில் நமது சருமத்திற்கு தேவையான வைட்டமின்கள் இருப்பதுடன், காயங்களை ஆற்றும் குணம் கொண்ட வேதிப்பொருளும் இருக்கின்றது. ஆதலால் தோலுடன் சாப்பிட பழகிக் கொள்ளவும்.
வாழைப்பழத்தை நாம் யாரும் தோலுடன் சாப்பிடுவதில்லை. ஆனால் தோலில் கால்சியம் அதிகமாக இருக்கின்றது. ஆதலால் தோலோடு சாப்பிட்டால் மூட்டு வழியைக் கட்டுப்படுத்தும்.
அதிக சத்துக்களைக் கொண்ட திராட்சை பழத்தையும் தோலுடன் சாப்பிட்டால் தான் முழு சத்துக்களும் கிடைக்கும்.
பெரும்பாலும் தோலுடன் சாப்பிட வேண்டிய பழங்களை கட்டாயம் அவ்வாறே சாப்பிட பழகிக் கொள்ளுங்கள், ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருந்தாலும், இதனால் உடம்பிற்கு சத்துக்கள் அதிகமாகவே கிடைக்கின்றது.
மேலும் முடிந்தவரை பழங்களை ஜுஸ் போட்டு குடிக்காமல் அப்படியே சாப்பிடுவது மிகவும் சிறந்தது. காரணம் பழத்தில் இருக்கும் நார்ச்சத்துக்கள் நமது உடம்பில் சேர வேண்டும் என்றால் அப்படியே சாப்பிடுவது தான் சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |