இரவில் தவறியும் இந்த பழக்களை சாப்பிடாதீங்க! ஆபத்து வருமா?
நாம் கட்டாயமாக சாப்பிட்டதும் ஒரு பழம் சாப்பிடுவது வழக்கம். அப்படி பழங்கள் சாப்பிடும் போது ஒர சில பழங்கள் எந்த நேரத்தில் எப்படி சாப்பிட வேண்டும் எனவும் ஒரு வரண்முறை உள்ளது.
இது ஆரோக்கியம் என நாம் கருதினாலும் அனைத்து பழங்களும் மாலையில் அல்லது இரவு நேரத்தில் சாப்பிட ஏற்றவை அல்ல, குறிப்பாக அதிக சர்க்கரை உள்ளடக்கம் கொண்ட பழங்களை சாப்பிடக் கூடாது.
பழங்கள் பொதுவாகவே ஒரு ஆரோக்கியமான சத்தான தேர்வாக இருந்தாலும், சில பழ வகைகள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுக்கலாம். இதனால் உடல் உறங்கும் நிலையில் இருக்கும் சக்கரை கொண்ட பழங்களை உண்ண கூடாது.
ஆனால் இது நம்மில் பலருக்கும் எந்த பழங்களை உண்ண கூடாது என்பது தெரியாது. அதனால் அது எந்தெந்த பழங்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இரவில் உண்ண கூடாத பழங்கள்
அனைவரும் விரும்பி சாப்பிடும் வாழைப்பழம். இதில் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ளன. படுக்கைக்கு செல்வதற்கு முன் வாழைப்பழத்தை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவுகளில் அதிகரிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது தவிர இதில் இருக்கும் பொட்டாசியம் வளர்சிதை மாற்றத்தை உண்டாக்கலாம். இதனால் தூக்கக் கலக்கம் அல்லது தூக்கமின்மைக்கு வழிவகுக்கும். அடுத்து நீர்ச்சத்து நிரம்பிய தர்பூசணி பழம்.இதை உறங்கும் முன் சாப்பிட்டால் சிறுநீர் கழிப்பதற்கு நீங்கள் அடிக்கடி செல்ல வேண்டி இருக்கும்.
இதனால் உறக்கத்தை விரைவாக இழப்பீர்கள். இரவில் சரியாக உறக்கம் வரவில்லை என்றால் ரத்த சக்கரையின் பாதிப்பு எளிதில் தீண்டலாம்.மற்றும் இதில் இருக்கும் இயற்கையான சத்து ரத்தில் கலக்க நேரிடும். திராட்சை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது மிகவும் சுவையான பழம் அது.
இதை படுக்கைக்கு செல்வதற்கு முன் உட்கொண்டால் உங்கள் இரத்த சர்க்கரை அளவை பாதிக்கும். அன்னாசிப்பழம் அதன் இனிப்பு மற்றும் புளிப்பு சுவைக்கு பெயர் பெற்ற ஒரு வெப்ப மண்டல பழம்.
இது வைட்டமின் சி இன் சிறந்த ஆதாரமாக இருந்தாலும், அன்னாசிப்பழத்தில் சர்க்கரை அதிகம் உள்ளது. இதனால் இரவு நேர ஸ்னாக்ஸ்க்கு சிறந்த தேர்வாக இந்த அன்னாசிப்பழம் இருக்காது.
தூக்கக் கோளாறுகள் ஏற்படுவதைத் தவிர்க்க இரவில் அன்னாசிப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.மேலும் இது வயிற்றில் அப்படியே இரவு முழுக்க இருக்கும் போது அமிலத்தன்மை நிரம்பி காணப்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |