முடி உதிரும் பிரச்சனை அதிகமா இருக்கா? கட்டாயம் இந்த உணவை சாப்பிட மறுக்காதீங்க!
முடி உதிர்வானது இப்போது மக்களிடையே காணப்படும் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாகும். அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி இருவருக்கும் முடி கொட்டும் பிரச்சனை அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது.
முடி உதிர்வுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஊட்டச்சத்து குறைபாடு, அதிகப்படியான மன அழுத்தம், நீங்கள் பயன்படுத்தக்கூடிய முடி பராமரிப்பு தயாரிப்புகள், மரபணு காரணங்கள், உள்ளிட்ட பல காரணங்களால் சிலருக்கு அதிகப்படியாக முடி உதிர்வு ஏற்படும்.
தலை சீவும் பொழுது முடி கொட்டுவது இயல்பானது. ஆனால் அதிகப்படியான முடி கொட்டினால் அதற்கு நமது உணவும் ஒரு காரணமாக உள்ளது. இதனால் இந்த முடி உதிர்வின் போதுஎந்த வகையான உணவுகளை உண்ண வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
முடி உதிர்வு
பலரும் அவ்வளவாக சாப்பிடாத சூரியகாந்தி விதை யில் ஏராளமான சத்துக்கள் இருக்கின்றன. இதில் நியாசின், வைட்டமின் ஈ அதிகம் இருக்கின்றன.
இதை தவிர கால்சியம், இரும்பு, மாங்கனீஸ், துத்தநாகம், செலினியம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுஉப்புக்களும் சூரியகாந்தி விதையில் உள்ளதால், மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை இது அதிகரிக்க செய்கிறது.இதிலிருக்கும் வைட்டமின் ஈ சத்தானது முடி உதிர்வை தடுத்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.
இதனால் நமது உணவில் சேர்த்துக்கொள்வது முக்கியமாகும்.பூசணி விதைகள் அழற்சி எதிர்ப்பு மற்றும் இது கல்லீரல், சிறுநீர்ப்பை, குடல் மற்றும் கூட்டு செயல்பாட்டை பராமரிக்க உதவும்.
பூசணி விதைகள் மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன, இதய ஆரோக்கியம், நோயெதிர்ப்பு செயல்பாடு மற்றும் சிறந்த தூக்கத்தை மேம்படுத்துகிறது.இதிலிருக்கும் துத்தநாகம், தாமிரம், இரும்பு போன்ற சத்துக்கள் முடி உதிர்விற்கு ஆரோக்கியமாகும்.
சால்மன் முழு வைட்டமின் B குழுவில்-பி3, பி5, பி7, பி6, பி9 மற்றும் பி12 ஆகியவற்றில் நிறைந்துள்ளது. அனைத்து உடல் செயல்பாடுகளின் ஆரோக்கியமான சமநிலையை பராமரிப்பதில் வைட்டமின் பி முக்கிய பங்கு வகிக்கிறது.
கர்ப்ப காலத்தில் சால்மன் மீன் சாப்பிடுவது கருவின் மூளை வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.இதனால் இது முடி உதிர்வையும் கட்டுப்படுத்தும்.இதை அனைத்தையும் தவிர முடி வளர்ச்சிக்கு மிக மிக முக்கியமாக இருப்பது கீரை வகைதான் முடிந்தவரை எல்லாவகையான கீரைகளையும் சாப்பிடுவது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |