தொகுப்பாளினி பிரியங்காவை சோகத்தில் ஆழ்த்திய மரணம்... அந்த நெருக்கமானவர் யார்?
பிரபல ரிவி தொகுப்பாளினி பிரியங்கா தனக்கு நெருக்கமான நண்பர் மரணித்ததை சோகமாக பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
தொகுப்பாளினி பிரியங்கா
பிரபல ரிவியில் தொகுப்பாளினியாக பல ஆண்டுகள் பணியாற்றி வரும் பிரியங்கா மக்களுக்கு பிடித்த தொகுப்பாளினியாக வலம் வருகின்றார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மாகாபா ஆனந்துடன் இணைந்து தொகுத்து வழங்கி முன்னணி விஜேவாக திகழ்ந்து வரும் இவர் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
மேலும் பல நிகழ்ச்சிகளை சோலோ தொகுப்பாளராக இருந்து தொகுத்து வழங்கும் இவர், சமீபத்தில் ஆரம்பித்த ஸ்டார் மியூ்சிக் சீசன் 4ல் தொகுத்து வழங்குகின்றார்.
நண்பரின் மரணம்
தற்போது பிரியங்கா தனக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் மரணமடைந்துவிட்டதாக மிகவும் எமோஷ்னலாக பதிவினை பதிவிட்டுள்ளார்.
சென்னையில் பிரபலங்கள் பலர் செல்லும் ஸ்கின் கிளினிக் நடத்தி வந்த வசந்த் ராஜ்குரு என்பவர் மிக இளம் வயதில் இறந்துவிட்டார். 'Was' என அவரை பற்றி இறந்தகாலத்தில் குறிப்பிட்டு பேசுவதே எனக்கு பெரிய வலியை தருகிறது என பிரியங்கா பதிவிட்டு இருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |