சாதம் மீந்து போய்விட்டதா? சுவையான ப்ரைடு ரைஸ் செய்து அசத்துங்க
இன்று அநேக வீடுகளில் மீதமாகும் உணவுப்பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, மறுநாள் அதையே சூடுபண்ணி சாப்பிட்டு வருகின்றனர்.
இது சாதத்திற்கும் பொருந்தும். ஆனால் சில வீடுகளில் மீந்து போன சாதத்தினை வெளியே கொட்டுவதையும் அவதானித்திருப்போம்.
அவ்வாறு மீந்து போன சாதத்தில் சுவையான பனீர் ப்ரைடு ரைஸ் செய்வது எப்படி என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
சாதம் – 1/2 கப்
பன்னீர் – 100 கிராம் (சதுரமாக நறுக்கியது)
இஞ்சி-பூண்டு பேஸ்ட் – 1 டீ ஸ்பூன்
வெங்காயம் – 2 டேபிள் ஸ்பூன்
கேப்சிகம் – 2 டேபிள் ஸ்பூன்
கேரட் – பீன்ஸ் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு ஏற்ப
கருப்பு மிளகு தூள் – 1/2 டீ ஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் – 1/2 டீ ஸ்பூன்
சோயா சாஸ் – 1 டீ ஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
செய்முறை:
முதலில் பன்னீரை சதுரமாக நறுக்கிய பின்பு அதனை எண்ணெயில் இட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
பின்னர் அதே எண்ணெயில் இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, முன்னர் வறுத்து வைத்துள்ள பன்னீரை சேர்த்துக்கொள்ளவும்.
தொடர்ந்து அவற்றுடன் வெங்காயம், கேப்சிகம், கேரட் மற்றும் பீன்ஸ் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். பின்னர் உப்பு, கருப்பு மிளகு தூள், சிவப்பு மிளகாய் தூள், சோயா சாஸ் சேர்த்து நன்றாக வதக்கவும்.
இறுதியாக நாம் வைத்திருக்கும் சாதத்தை எடுத்து அவற்றுடன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.
5 நிமிடங்கள் கழித்து பார்த்தல் டேஸ்டியான பன்னீர் ஃப்ரைடு ரைஸ் தயராக இருக்கும். அவற்றின் மேல் நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கவும்.