Fried Rice உடம்பிற்கு தீங்கு விளைவிக்குமா? பலரும் அறியாத உண்மை
இன்று பெரும்பாலான உணவு பிரியர்களின் பட்டியலில் அதிகமாக வலம்வருவது Fried Rice தான். இவை உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்குமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பிரைடு ரைஸ் சாப்பிடுவதால் தீங்கு ஏற்படுமா?
அதிக கலோரிகள் கொண்டுள்ள Fried Riceல், எண்ணெய் மற்றும் சமைத்த முட்டைகளுடன் தயாரிக்கும் போது உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கின்றது.
Fried Rice சாப்பிடுவதால் செரிமான பிரச்சினை ஏற்பட்டு மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். ஏனெனில் இதில் நார்ச்சத்து குறைவாக இருப்பதே காரணம். மேலும் இதய மற்றும் பக்க நோய், புற்றுநோய் பாதிப்பும் ஏற்படும்.
குறிப்பாக சோயா சாஸ், மீன் சாஸ் மற்றும் உப்பு போன்ற அதிக சோடியம் நிறைந்த பொருட்கள் சேர்க்கப்படுவதால், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்க்கு வழிவகுக்கின்றது.
இந்த உணவுகளை சமைப்பதற்கு வெண்ணெய், நெய், பன்றிக் கொழுப்பு அதிகமாக சேர்க்கப்படுகின்றது. இவை கெட்ட கொழுப்புகள்(LDL) என்று அழைக்கப்படும் நிலையில், இவை ரத்தத்தில் கொழுப்பு அளவை அதிகரித்து இதய நோய்க்கு வழிவகுக்கும்.
மேலும் இந்த உணவை தயாரிப்பதற்கு பதப்படுத்தப்பட்ட இறைச்சி, காய்கறிகள், சாதம் இவற்றினை பயன்படுத்துவதால், சோடியம், சர்க்கரை மற்றும் பிற சேர்க்கைகள் அதிகமாக இருக்கும்.
Fried Riceல் குறைந்த அளவு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் காணப்படுகின்றது.
ஆதலால் முடிந்த அளவு இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. அவ்வாறு இல்லையெனில் குறைந்த அளவு எடுத்துக் கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |