உங்க வீட்டுல ஃபிரிட்ஜ் இருக்கின்றதா? இந்த பதிவு உங்களுக்கே
By Manchu
இன்று குளிர்சாதனப் பெட்டி என்பது பெரும்பாலான வீடுகளில் அத்தியாவசிய பொருளாக இருந்து வருகின்றது. குளிர்சாதனப் பெட்டியை நாம் சரியாக பராமரிக்காவிட்டால் பாரிய சிக்கலை ஏற்படுத்தும்.
ஃபிரீசரில் ஐஸ் அதிகமாக சேர்ந்துவிட்டால், இதுவே விபத்து ஏற்பட காரணமாக அமையும் என்று கூறப்படுகின்றது. ஆதலால் குளிர்சாதனப்பெட்டியை நீங்கள் 3 மாதத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டுமாம். அந்த வழிமுறைகளை தற்போது தெரிந்து கொள்ளலாம்.
image: shutterstock
ஃபிரிட்ஜ் வைத்திருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?
- குளிர்சாதனப்பெட்டியை மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். அதாவது உள்ளே இருக்கும் உணவினை காலி செய்வதில் ஆரம்பிக்க வேண்டும். பால்பொருட்கள், இறைச்சி மற்ற உணவுகளை குளிர்சாதனப்பையில் வைக்க வேண்டும். ஏனெனில் வெளியே பாக்டீரியாக்கள் அதிகமாக பெருகுமாம்.
- பின்பு உள்ளே இருக்கும் அடுக்குகளை வெளியே எடுத்து, பாத்திரம் கழுவும் திரவத்தை வைத்து நன்று சுத்தம் செய்து, சூடான நீரில் சுத்தம் செய்யலாம். சில தருணங்கள் அந்த அடுக்குகளை வெளியே எடுக்கமுடியவில்லை என்றால் உள்ளே கழுவும் திரவத்தை வைத்து துடைத்து எடுத்து, பின்பு குளிர்ந்த நீரைக் கொண்டு தான் துடைக்க வேண்டும்.
- தொடர்ந்து உள்ளே துடைப்பதற்கு மில்டன் ஸ்டெரிலைசிங் திரவத்தை தயாரித்து அதனை துஐடப்பதற்கு பயன்படுத்த வேண்டும். மேலும் காகித துண்டுகள், அல்லது சிறிய டவலைக் கொண்டு உலர வைக்க வேண்டும். இதே முறையினை செய்து ஃப்ரீசரையும் நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
image: shutterstock
- வெளிப்புறத்தின் கைப்பிடி, கதவு இவற்றிலும் அதிகமாக பாக்டீரியாக்கள் தொற்று ஏற்படும் என்பதால் இதனையும் குறித்த திரவத்தை வைத்து துடைக்க வேண்டும்.
- பின்பு குளிர்சாதனப் பெட்டியில் பின்புறத்தில் இருக்கும் மின்தேக்கி சுருள்களை சுத்தம் செய்யவும், தூசி மற்றும் செல்லப் பிராணிகளின் முடி இவைகள் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளதால் பின்புறத்தில் வருடத்திற்கு ஒருமுறையாவது நிச்சயம் சுத்தம் செய்ய வேண்டும்.
- குளிர்சாதனப் பெட்டியினுள் உணவுப்பொருட்களை சுத்தம்செய்த பின்பு சேமிக்க வேண்டும் என்றால், பெட்டியின் வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் இருக்குமாறும், குளிர்ச்சியான பின்பு வைக்க வேண்டும்.
- அடுக்குகளில் அடியில் பழைய செய்தித்தாள்களை போட்டு வைத்தால், ஏதேனும் பொருட்கள் கீழே கொட்டிவிட்டாலும் குறித்த பேப்பருடன் தூக்கி வெளியே போட்டுவிட்டு எளிதில் சுத்தம் செய்து கொள்ளலாம்.
- குளிர்சாதன பெட்டியில் கெட்ட வாசனை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பைகார்பனேட் சோடாவை பயன்படுத்துவதுடன், குளிர்சாதனப்பெட்டி டியோடரைசர்களையும் வாங்கி பயன்படுத்தலாம்.
- குளிர்சாதனப் பெட்டியில் காற்று செல்வதற்கு இடம் தேவைப்படுவதால், முழுவதும் பொருட்களை வைத்து நிரப்பாமல் முடிந்தவரை சற்று குறைவான பொருட்களை சேமித்து வைக்கவும். அடிக்கடி குளிர்சாதனப்பெட்டி கதவுகளை திறப்பதையும் தவிர்க்கவும்.
image: Getty Images/iStockphoto
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |
viral fever symptoms: இந்த அறிகுறிகள் இருந்தால் உஷாரா இருங்க! 23 நிமிடங்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US