பிரபல ரிவியில் வெற்றி பெற்று வாங்கிய பரிசை இப்படியா வைப்பது? நிஷாவைத் திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்
கருப்பு ரோஜா என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வரும் அறந்தாங்கி நிஷா காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
தற்போது பெரும்பாலான பிரபலங்கள் தங்களது பெயரில் யூரியூப் சேனல் ஆரம்பித்து ரசிகர்களுக்கு பிடித்த வகையில் காணொளியினை வெளியிட்டு அசத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அறந்தாங்கி நிஷாவும் கருப்பு ரோஜா என்ற பெயரில் சேனல் ஒன்றினை ஆரம்பித்து காணொளிகளை பதிவிட்டு வருகின்றார். இதில் கடந்த சில வாரத்திற்கு முன்ப ஃபிரிட்ஜ் டூர் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இதில் 7 வருடத்திற்கு முன்பு வாங்கிய ஜாம் மற்றும் காய்ந்த எலுமிச்சை என பல்வேறு கெட்டுப்போன பொருட்களே இருந்துள்ளது. தனது பாணியில் குறையை நிறைவாக பேசிய இக்காட்சியினை அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.
மேலும் குறித்த ஃபிரிட்ஜ் பிரபல ரிவியில் வெற்றி பெற்று வாங்கியுள்ளதாக கூறினார். இதனை கேட்ட ரசிகர்கள் பிரபல ரிவி இனி உங்களுக்கு பரிசே கொடுக்காது என்றும் பிரிட்ஜை தவிர மற்ற எல்லாம் கெட்டுப்போனது தான் என்று கிண்டலாக பேசி வருகின்றனர்.