வெள்ளிக்கிழமை இப்படி செய்தால் போதும்! பணவரவு அதிகரிக்கும்
வெள்ளிக்கிழமையான கடவுளுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. அந்நாளில் பல சுப காரியங்களை செய்வது உண்டு.
இதையடுத்து, வீட்டில் மகாலட்சுமி வர, நில வாசற்படிக்கு வைக்கும் மஞ்சள்தூளில் சிறிதளவு பச்சைக் கற்பூரத்தை கலந்து, குழைத்து நில வாசப்படியில் பூசுங்கள்.
அதன்பின் குங்குமம் வையுங்கள். இந்தமுறை மிகவும் சிறப்பான முறையாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், வெள்ளிக் கிழமைகளில் தாமரை திரி வைத்து அதில் விளக்கேற்றி வந்தால் குபேர அருள் கிடைக்கும்.
வீட்டு பூஜை அறையில் வைத்திருக்கும் கண்ணாடியானது கிழக்கு திசை நோக்கியோ அல்லது வடக்கு திசை நோக்கியோத் தான் இருக்க வேண்டும்.
சுவாமி படம் எந்த திசையில் வைத்துள்ளீர்களோ அதே திசையில் தான் முகம் பார்க்கும் கண்ணாடியும் வைக்க வேண்டும். பின்னர், வெள்ளிக் கிழமை நாளில் சுக்கிர ஓலையில் தாமரை இதழ் கொண்டு மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்து மந்திரம் கூறினால் செல்வம் பெருகும்.
அடுத்ததாக வெள்ளிக் கிழமை மாலை வேளையில் வீட்டை சுத்தம் செய்து சாம்பிராணி புகையை வீடு முழுக்க புடிப்பதால் வீட்டில் கெட்ட சக்திகள் இருந்தால் விலகி நேர்மறை ஆற்றலை அதிகரிக்க முடியும்.
இறுதியாக வெள்ளிக் கிழமைகளில் அரச மரத்தை 11 முறை சுற்றி வந்து அந்த மரத்தடியில் அமர்ந்து இருக்கும் விநாயகருக்கு 11 விளக்கு ஏற்றி வந்தால் பண வரவு அதிகரிக்கும்.