தேசிய கீதம் பாடி பிரமிக்க வைத்த சுதந்திர போராட்ட வீரர்கள்...வைரலாகும் வீடியோ காட்சி
செயற்கை நுண்ணறிவான AI பயன்படுத்தி நம் நாட்டின் இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் தேசிய கீதத்தை பாடியிருந்தால் எப்படி இருக்கும் என்பதை வீடியோவாக செய்து வெளியிட்டிருக்கிறார்கள்.
தேசிய கீதம் பாடிய போராட்ட வீரர்கள்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) ஒன்றில் தற்போது பலரும் பலவிதமான புகைப்படங்களையும் வீடியோக்களை செய்து வைரலாக்கி வருகின்றனர்.
முதலில் ஒரு பொழுது போக்கிற்காக ஆரம்பித்து தற்போது வெவ்வேறு துறைகளில் இந்த தொழிநுட்பத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், இலங்கையின் சுதந்திரமான இன்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கொண்டு வீடியோ ஒன்றை தயாரித்திருக்கிறார்கள்.
AajTak honors the 77th Independence Day with a remarkable tribute, using AI technology to recreate the voices of our founding fathers singing the National Anthem. This initiative not only preserves history but also brings it to life, allowing us to witness the leaders in their… pic.twitter.com/xnPvgX6vIx
— Rahul Kanwal (@rahulkanwal) August 14, 2023
அந்த வீடியோவில் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுப்பட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ், சரோஜினி நாயுடு, அம்பேத்கர், மவுலானா அப்துல் கலாம் அசாத், சர்தார் வல்லபாய் பட்டேல், ரவீந்திரநாத் தாகூர் போன்ற வீரர்கள் நாட்டின் தேசிய கீதத்தை பாடியிருந்தால் எப்படி இருக்கும் என்பதை இந்த தொழிநுட்பத்தைக் கொண்டு செய்திருக்கிறார்கள்.
இந்த வீடியோ காட்சி இணையத்தில் தற்போது தீயாய் பரவி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |