கொரோனாவை மிக மோசமாக கையாண்ட தலைவர்களில் மோடிக்கு முதலிடம்
கொரோனா தொற்றை மிக மோசமாகக் கையாண்ட தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் மோடிக்கு முதலிடம் அளித்துள்ளது 'The Conversation'.
பிரபல பத்திரிக்கை ஒன்று கொரோனா தொற்றை மிக மோசமாகக் கையாண்ட தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் மோடிக்கு முதலிடம் அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக 4 லட்சத்துக்கும் அதிகமானோர் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்போர் எண்ணிக்கை 4,500-ஐ கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
மத்தியில் ஆளும் மோடி அரசு கொரோனா தடுப்புப் பணிகளில் கோட்டைவிட்டதால், இந்தியாவின் பல மாநிலங்களில் மக்கள் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல், போதுமான ஆக்சிஜன் சிலிண்டர்கள் இன்றி தவித்து வருகின்றனர்.
கொரோனா இரண்டாவது அலையில் பிரதமர் மோடி முன்னெச்சரிக்கை எடுக்க தவறியதால் இந்த பிரச்சினையை தற்போது இந்தியா பாதிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச செய்தித் தளமான ‘தி கான்வெர்சேஷன்’ கொரோனாவை மிக மோசமாகக் கையாண்ட தலைவர்கள் எனக் குறிப்பிட்டு வெளியிட்டுள்ள கட்டுரையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை முதலிடத்தில் வைத்துள்ளது.
அந்தக் கட்டுரையில், “ஒரு நாளைக்கு சுமார் 4 லட்சம் புதிய கொரோனா தொற்று பாதிப்பை பதிவு செய்து உலகளாவிய அளவில் தொற்றுநோயின் மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது. ஆக்சிஜன் இன்றியும், உயிர் காக்கும் மருந்துகள் இன்றியும் கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் இறந்து கொண்டிருக்கிறார்கள்.
படுக்கை வசதிகள் இல்லாமல் கொரோனா நோய்வாய்ப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சேர முடியாமல் அவதிப்படுகிறார்கள். நாட்டின் இத்தகைய சோகத்திற்கு இந்தியர்கள் குற்றம்சாட்டும் ஒரு மனிதர் பிரதமர் நரேந்திர மோடி.