பேன்ட் பைக்குள் பாம்புகளை கடத்தி சென்ற நபர்... வைரல் புகைப்படங்கள்
பேன்ட் பைக்குள் கேசுவலாக பாம்புகளை வைத்து அதனை கொண்டு செல்ல முயன்ற பயணி ஒருவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் புகைப்படம்
ஒரு நாட்டில் இருந்து இன்னுமொரு நாட்டிற்கு சட்டவிரோதமாக எந்த ஒரு பொருளையும் கொண்டு செல்ல முடியாது. அப்படி கடத்தி சென்றால் அவர்கள் விமான நிலையத்தில் வைத்து பிடிக்கப்படுவார்கள்.
அந்த வகையில் அமெரிக்காவின் நியூயார்க்கில் ஒரு பயணி, பாம்புகளை கடத்துவதற்கு முயற்சி செய்துள்ளார். இதற்காக சிறிய பாம்புகளை ஒரு பையில் வைத்து அதனை தனது பேன்ட் பைக்குள் கேசுவலாக வைத்திருக்கிறார்.
இந்த சம்பவம் மியாமி சர்வதேச விமான நிலையில்தான் இடம்பெற்றுள்ளது. இவர் பாதுகாவலர்கள் சரியாக சோதனை செய்யாமல் விட்டு விட்டனர்.
இதனால் அவர் பல அடுக்கு பாதுகாப்பை கடந்து, விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்த நேரத்தில் கண்காணிப்பு கேமராவில் பார்த்து சந்தேகித்துள்ளனர்.
இதையடுத்து உடனடியாக அவரை பிடித்த அதிகாரிகள், மீண்டும் அவரிடம் தீவிர சோதனை மேற்கொண்டனர். அவரது பேன்ட் பைக்குள் இருந்த சிறிய பையை பிரித்து பார்த்தபோது, சிறிய பாம்புகள் ஊர்ந்து வெளியே ஓடின.
இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதை அடுத்த உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார்.
Officers at @iflymia detected this bag of snakes hidden in a passenger’s pants at a checkpoint on Fri, April 26. @TSA called our @CBPSoutheast and Miami-Dade Police partners in to assist, and the snakes were turned over to the Florida Fish and Wildlife Conservation Commission. pic.twitter.com/CggJob8IT8
— TSA_Gulf (@TSA_Gulf) April 30, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |