நீண்ட இடைவேளைக்குப் பின்பு கம்பேக் கொடுத்த நடிகர் ஜனகராஜ்! வைரலாகும் புகைப்படம்
நடிகர் ஜனகராஜ் நீண்ட இடைவேளைக்கு பின்பு தாத்தா என்ற குறும்படத்தில் நடித்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் ஜனகராஜ்
நடிகர் ஜனகராஜ் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
கடைசியா 96 மற்றும் தாதா 87 என்ற படங்களில் நடித்து பின்பு சினிமாவிலிருந்து பிரேக் எடுத்துள்ளார்.
பின்பு ஜனகராஜ் அமெரிக்காவில் வாழ்ந்துவருவதாக கூறப்பட்ட நிலையில், அவர் தான் அமெரிக்கா செல்லவில்லை என்று பதில் கொடுத்திருந்தார்.
தற்போது குறும்படம் ஒன்றின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். ஆம் தாத்தா என்ற குறும்படத்தில் நடித்துள்ளார்.
வீட்டு காவலாளியாக பணிபுரியும் ஜனகராஜ் தனது மனைவியுடன் வாழ்ந்து வரும் நிலையில், ஒருநாள் பேரன் இவரது வீட்டிற்கு வந்துள்ளார். பேரனின் வருகை சந்தோஷப்படுத்துகிறது. எப்போதாவது வீட்டிற்கு வரும் பேரன் ஆசைப்பட்டு பொம்மை கார் கேட்கிறான்.
அந்த கார் 800 ரூபாய் என்பதால், அதனை வாங்குவதற்காக தான் பல ஆண்டுகளாக பொக்கிஷமாக வைத்த பொருள் ஒன்றினை விற்க முடிவு செய்கின்றார்.
அதை அவர் செய்தாரா? பேரனின் ஆசையை நிறைவேற்றினாரா என்பது தான் ‘தாத்தா’ கதை. நீண்ட நாள் கழித்து ஜனகராஜைப் பார்த்த ரசிகர்கள் அவரது புகைப்படத்தைப் பகிர்ந்து வருவதுடன், ’ஆள் அடையாளமே தெரியாமல் மாறி விட்டாரே’ என்றும் கூறி வருகின்றனர்.
மேலும் அடுத்தடுத்து படங்களிலும் அவர் ஆக்டிவாக நடிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |