நடிகை சாந்தினி கருகலைப்பு விவகாரம்.. 6 சட்டபிரிவு கீழ் வழக்கு! தலைமறைவான அமைச்சர்
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தன்னை திருமணம் செய்வதாக கூறி 5 ஆண்டுகள் ஏமாற்றி கருவை கலைக்க வைத்ததாக நடிகை சாந்தினி தேவா பரபரப்பு புகார் ஒன்றை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்திருந்தார்.
முன்னாள் அமைச்சர் மீது பிரபல நடிகை அளித்த புகார் மனு விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை போலீசாரிடம் சமர்பிக்க மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்து குரல் எழுந்துள்ளது.
இதனிடையே, டிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையம் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது.
குறிப்பாக 313- பெண்ணின் அனுமதி இல்லாமல் கட்டாயப்படுத்தி கருவை கலைத்தல், 323 - அடித்து காயம் ஏற்படுத்துதல்,417 - நம்பிக்கை மோசடி, 376 - பாலியல் வன்கொடுமை, 506 (1) - கொலை மிரட்டல், 67(a)- தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனால், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க்கப்பட உள்ள நிலையில், ராமநாதபுரத்தில் உள்ள அவரது வசிப்பிடம் பூட்டப்பட்டு இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே கைது நடவடிக்கைக்கு பயந்து முன்னால் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.