இரப்பை கோளாறுக்கு உடனடி தீர்வு வேண்டுமா? 2 கிராம்பு இருந்தால் போதும்
தற்போதைய சமூகத்தில் சிறு வயதினர் முதல் இரைப்பை கோளாறு பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான முக்கிய காரணம் ஆரோக்கியம் இல்லாத உணவுகளை உண்பது தான்.
இந்த பிரச்சினைக்கு உரிய சிகிச்சைகளை எடுக்க தவறும் பட்சத்தில் உயிர் இழப்பு ஏற்படவும் வாய்ப்பு இருக்கின்றது.
அந்த வகையில், இரப்பை கோளாறு உள்ளவர்கள் சாப்பாட்டில் சில கட்டுபாடுகளை செய்வதன் மூலம் நோயிலிருந்து மீண்டு வரவும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அப்படி என்னென்ன உணவுகள் இரப்பை கோளாறு உள்ளவர்கள் சாப்பிட வேண்டும்? என்பதனை கீழுள்ள பதிவில் பார்க்கலாம்.
அறிகுறிகள்
- அடிவயிற்றில் வலி குமட்டல்
- விக்கல்
- வயிற்று வலி, வாந்தி
- அஜீரணம், வாய்வு
- வயிற்றில் பிடிப்புகள், பசியின்மை, நெஞ்செரிச்சல்.
வயிற்றில் எரிச்சல் நோய் ஏற்பட காரணங்கள்
1. பொருத்தமற்ற வாழ்க்கை முறை.
2. சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருத்தல்.
3. இரவு நேரங்களில் தூங்காமல் இருத்தல்.
4. உடற்பயிற்சிகள் மேற்கொள்ளாமல் துரித உணவுகளில் அதி நாட்டம் செலுத்தல்.
விளைவுகள்
- குடல் வீக்கம்
- வயிற்றில் தொற்று நோய்கள் ஏற்படுதல்
- சிறுநீரகத்தில் கற்கள் தோன்றல்
இரப்பை கோளாறுவை சரிச் செய்யும் உணவுகள்
1. இரைப்பை குழாயில் உள்ள தசைகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க இஞ்சி உதவியாக இருக்கிறது. இதன்படி, இஞ்சியை டீயில் அல்லது சாப்பாட்டில் ஒரு குறிப்பிட்ட அளவு சேர்த்து கொள்ளலாம்.
2. உணவில் பெருங்காயம் சேர்த்து கொள்ள வேண்டும். ஏனெனின் இது வயிற்றில் உள்ள வாயு மற்றும் தசை பிடிப்புகளை குணப்படுத்த உதவுகிறது.
3. இரப்பை பிரச்சினையுள்ளவர்கள் வெறும் வாயில் இரண்டு கிராம்புகளை போட்டு மெல்ல வேண்டும். இது வயிற்றில் உண்டாகும் அசிடிட்டியை குறைக்கும்.
4. அடிக்கடி ரசத்தில் கருப்பு மிளகு சேர்த்து சாப்பிட வேண்டும். இது இரைப்பை தொடர்பான பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்கின்றது. அத்துடன் வயிறு ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.
5. கிச்சடி சாப்பிடுவது இரப்பை கோளாறு பிரச்சினைக்கு நல்லது. இது போன்று பச்சை காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் நோயிலிருந்து எம்மை பாதுகாக்க முடியும்.
6. காரமான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
7. சிறுநீர் வரும் போது கட்டுபடுத்த கூடாது, இப்படி அடக்கி வைப்பதால் வேறு பிரச்சனைகள் எழ வாய்ப்பு இருக்கிறது.
8. புகைப்பிடித்தல். மது அருந்துதலை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
9. உடலை வலைத்து நெலித்து தூங்க கூடாது.
10. நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி அவசியம்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
- பால் பொருட்கள்
- சர்க்கரை செயற்கை இனிப்புகள் சேர்த்த உணவுகள்
- வறுத்த பொரித்த உணவுகள்
- பாட்டிலில் அடைக்கப்பட்ட பானங்கள்
- பேரிக்காய், பிரக்கோலி. முட்டைக்கோஸ்
-
வெங்காயம், காலிபிளவர், பீன்ஸ்