ரத்தத்தில் சர்க்கரை அளவு சரியாக இருக்கணுமா? இந்த உணவை கட்டாயம் சாப்பிடுங்க
உடம்பில் ரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைப்பதற்கு என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ரத்த சர்க்கரை அளவு
இன்றைய காலத்தில் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை காரணமாக பலரும் 30 வயதை கடக்கும்போதே நீரிழிவு நோயினால் அவதிப்படுகின்றனர்.
உடம்பில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது இதயம், ரத்த நாளங்கள், கண்கள், சிறுநீரகம் மற்றும் நரம்புகள் கடுமையாக பாதிக்கப்படுமாம்.
இதனை சரிசெய்வதற்கு நீரிழிவு நோயாளிகள் மருந்துகளை எடுத்துக்கொள்கின்றனர். ஆனால் ஆரோக்கியமான உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்வது அவசியம் ஆகும்.
அந்த வகையில் என்னென்ன உணவுகளை எடுத்துக்கொண்டால் ரத்த சர்க்கரை அளவை சரியாக வைக்கமுடியும் என்பதை தெரிந்து கொள்வோம்.

ஓட்ஸ்
நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மையளிக்கும் உணவாக இருப்பது ஓட்ஸ் ஆகும். இதில் நார்ச்சத்து மற்றும் பீட்டா குளுக்கான்கள் இருப்பதால் இவை செரிமானத்தை மெதுவாக்கி ரத்த சர்க்கரை அளவு உயர்வதை தடுக்கப்படுகின்றது.

கொய்யாப்பழம்
நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்த கொய்யாபழத்தினை எடுத்துக் கொள்வது அவசியம். இவை செரிமானத்தை மேம்படுத்துவதுடன், ரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகின்றது.
இலவங்கப்பட்டை
இயற்கையாகவே ரத்த சர்க்கரை அளவை குறைக்க இலவங்கப்பட்டை உதவுகின்றது. இன்சுலின் உணர்திறமை அதிகரிப்பதுடன், ரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தவும் செய்கின்றது. ஆதலால் இலவங்கப்பட்டை தூளை தேநீர் மற்றும் ஓட்ஸ் இவற்றில் கலந்து சாப்பிடலாம்.

வெந்தய விதைகள்
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் வெந்தயம் அதிகமாக உதவி செய்கின்றது. நார்ச்சத்து நிறைந்துள்ள வெந்தயம் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றது. இரவில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நன்மை அளிக்கின்றது.

ஆளி விதைகள்
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து நிறைந்த ஆளி விதைகள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், இதய ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது. ஆளி விதையை வறுத்து பொடியாக வைத்தும் பயன்படுத்தலாம்.

பாகற்காய்
கசப்பாக இருக்கும் பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகும். இதில் பாலிபெப்டைடுகள் என்ற கூறு சர்க்கரை அளவை குறைப்பதுடன், உடலுக்கு நன்மை அளிக்கவும் செய்கின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |