ஆரோக்கியம் தான் - ஆனால் இரவில் இந்த உணவுகளை சாப்பிட கூடாது - ஏன் தெரியுமா?
எவ்வளவு ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் ஒரு சில உணவுகளை அதிக நேரம் கழித்து இரவு நேரங்களில் உண்ண கூடாது. இதற்கான காரணத்தை பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இரவில் சாப்பிட கூடாத உணவுகள்
நாம் இரவில் சாப்பிடும் சில உணவுகள் நம் உடலுக்கு பல பிரச்சனைகளை கொண்டு வரும். இரவில் தாமதமாக சாப்பிடும் உணவுகள் வயிறு உப்புசம் அல்லது அசிடிட்டி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்த கூடும். இதை தடுக்க எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
சிட்ரஸ் பழங்கள் : ஆரஞ்சு, திராட்சை மற்றும் எலுமிச்சை போன்ற பழங்களில் நிறைய சத்துக்கள் இருக்கின்றன. இது உடலுக்கு ஆரோக்கியமாக இருந்தாலும் அவற்றின் அமிலத்தன்மை இரவில் உங்கள் வயிற்றை பாழாக்கும். இாதனால் இரவில் சரியான தூக்கம் இல்லாமல் சிரப்பட நேரிடலாம்.
தக்காளி: தக்காளியில் வைட்டமின்ஸ் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் இந்த பழங்களில் இயற்கையாகவே இயற்கை அமிலங்கள் நெஞ்செரிச்சல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். இதனால் தக்காளியில் சம்பந்தப்பட்ட உணவுகளை அதிகளவாக உண்ணாமல் தடுப்பது நன்மை தரும்.
ப்ரோக்கோலி & காலிஃபிளவர்: cruciferous எனப்படும் இந்த சிலுவை காய்கறிகள் நம் உடலுக்கு ஆரோக்கியமானவை, ஆனால் இரவில் இவற்றை சாப்பிட்டால் ஜீரணமாவது கடினமாக இருக்கும். எனவே இதை மதிய நேர உணவாக சாப்பிடுவது சிறந்தது.
டார்க் சாக்லேட்: டார்க் சாக்லேட்டில் நம் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன. ஆனால் இதில் இருக்கும் காஃபின் இரவு முழுவதும் உங்களை துங்க விடாமல் விழித்திருக்க செய்யும்.
நட்ஸ்கள் : இரவில் அதிக அளவு பாதாம் அல்லது முந்திரி சாப்பிடுவது செரிமானத்தை பாதிக்கும். மேலும் ஓய்வு சுழற்சியை மெதுவாக்கும். இதனால் உங்களின் இரவு தூக்கம் சீர்குலையும். நட்ஸ்களில் இருக்கும் அதிக கொழுப்பு மற்றும் கலோரிகள் அஜீரணம் மற்றும் உப்புசத்தை ஏற்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
