இரவு லேட்டா சாப்பிடுறீங்களா? அப்போ இந்த நோயின் தாக்கம் இருக்கும்
பொதுவாக ஆரோக்கியமாக வாழ நினைப்பவர்கள் உணவு எடுத்துக் கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனின் உணவு பழக்கங்கள் சரியாக இருந்தால் நீங்கள் இளமையாகவே நீண்ட நாட்களுக்கு வாழலாம்.
இதன்படி, ஒருவர் மூன்று வேளையும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சாப்பாட்டிற்கு பின்னர் தங்களின் அன்றாட வேலைகளை தொடர்ந்து செய்யலாம்.
மதிய நேர உணவிற்கு பின்னர் நாம் எப்போதும் வேலைச் செய்வது வழக்கம். ஆனால் இரவு சாப்பாடு எடுத்து கொண்டதற்கு பின்னர் எந்தவித வேலையும் செய்யாமல் தூங்கி விடுவோம். இதனால் கல்லீரல் பாதிப்பு வரும் என மருத்துவர் ஒருவர் எச்சரிக்கிறார்.
இன்னும் சிலர் இரவு வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு நள்ளிரவில் உணவு எடுத்துக் கொள்வார்கள். இது செரிமானத்தில் தாக்கம் செலுத்தும்.
அந்த வகையில், இரவு நேர உணவு தாமதமாக சாப்பிடும் பொழுது என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை பதிவில் பார்க்கலாம்.
இந்த பழக்கம் உங்களிடம் இருக்கா?
1. இரவு நேரம் உணவை தாமதமாக எடுக்கும் பொழுது உடலில் அதிக கலோரி சேர்வதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் உங்கள் உடல் பருமன் அதிகரிக்கும். அதே சமயம், கொழுப்பு கல்லீரலில் படிய தொடங்கி, அது நாளடைவில் லிவர் கொழுப்பு கல்லீரல் நோயை ஏற்படுத்தும்.
2. காலை, மதிய உணவுகளுக்கு பின்னர் வேலைச் செய்வது வழக்கம். ஆனால் இரவு நேரம் உணவை சாப்பிட்டவுடன் சிலர் படுக்கைக்கு சென்று விடுவார்கள். இதனால் அவர்களுக்கு வயிறு சுற்றி கொழுப்பு படியும். அத்துடன் இதயங்களுக்கு செல்லும் நாளங்களில் கொழுப்பு படியும்.
3. இரவு உணவு தாமதமாக சாப்பிடும் ஒருவருக்கு செரிமான கோளாறுகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் அவர்களின் வளர்சிதை மாற்றங்கள் பாதிக்கப்பட்டு, நீரழிவு நோய் கூட வரலாம். அத்துடன் உணவு சாப்பிட்ட பின்னர் நெஞ்செரிச்சல், ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சினைகள் வரலாம். இன்னும் சிலருக்கு வயிறு கனமாக இருப்பது போன்று தோன்றும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |