கல்லீரலில் இருக்கும் நச்சுகளை அடித்து விரட்டும் சக்திவாய்ந்த உணவுகள்! யார் யாரெல்லாம் சாப்பிடக் கூடாது தெரியுமா?
பொதுவாக நமது உடலில் இருக்கும் கல்லீரல் ரத்தத்தை சுத்தப்படுத்துவது, புரதத்தை உருவாக்குவது, ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவது, ஊட்டச்சத்துக்களை சீராக பயன்படுத்துவது என பல வகையான வேலைகளை செய்து வருகின்றது.
இந்த செயற்பாடுகளில் ஏதாவது மாற்றம் ஏற்படும் போது அதில் கோளாறு ஏற்பட்டு விட்டது என்று அர்த்தம்.
இந்த கல்லீரல் பிரச்சினையால் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பாதிக்கபடுகின்றார்கள். மேலும் கல்லீரல் நோய் என்பது, 'சிரோசிஸ்' என அழைக்கப்படுகின்றது. திகப்படியான கொழுப்பினால் ஏற்படும் வீக்கமே இவ்வாறு அழைக்கப்படுகின்றது.
இதனை தொடர்ந்து இந்த நோய்கள் வந்து விட்டால், அதனை மருந்து குடித்து, சரிச் செய்வதை விட சில உணவுகள் தொடர்ந்து சாப்பிடுவதால் சரிச் செய்யலாம்.
அந்த வகையில் கல்லீரல் நோயுள்ளவர்கள் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
கல்லீரல் நோயுள்ளவர்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள்
1. காபி
காபியில் கரிம அமிலங்கள், பாலிசாக்ரைடுகள், ஆன்டிஆக்ஸிடன்டுகள் மற்றும் பாலிபினால்கள் ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. இதனால் கல்லீரல் பாதிப்பிற்கு இது சிறந்ததாகும். மேலும் சிரோசிஸ் நோய்க்கு எதிரான ஆற்றலை அதிகரிக்கும்.
2. பச்சை இலை உணவுகள்
பொதுவாக மதியம் நாம் சாப்பிடும் கீரை, முட்டைக்கோஸ் போன்ற பச்சை இலை ஆகியவற்றில் பொட்டாசியம், மாங்கனீசு, மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. இது நச்சு ரசாயனங்களை உடம்பிலிருந்து நீக்க உதவுகின்றது.
3. பூண்டு
சமையலுக்கு பயன்படுத்தும் பூண்டில் அல்லிசின், வைட்டமின் சி, வைட்டமின் பி6 மற்றும் செலினியம் சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. இது உடம்பிலிருக்கும் தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றுகின்றது. மேலும் இது ஆன்டிஆக்ஸிடன்டுகளின் செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலம், கல்லீரலின் செயல்பாட்டை அதிகரிக்க உதவும்.
4. பீட்ரூட்
காய்கறிகளில் அதிகமான வைட்டமின்கள், நார்ச்சத்து ஆகிய சத்துக்கள் அதிகம் இருக்கின்றது என கேள்விப்பட்டிருப்போம். அந்தவகையில் பீட்ரூட்டில் மாங்கனீசு, பொட்டாசியம், வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகியன உள்ளது. இது நொதிகளின் செயற்பாட்டை அதிகரிப்பதோடு நச்சுகளின் தாக்கத்தை குறைக்கின்றது.
5.சிட்ரஸ் பழங்கள்
நம் உடலில் என்ன இல்லாவிட்டாலும் பிரச்சினையில்லை கல்லீரல் முக்கியமாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இதில் சில சில கோளாறுகள் வரும் பட்சத்தில் சிட்ரஸ் பழங்களை சாப்பிட வேண்டும். இதனால் கல்லீரல் தாக்கம் குறைக்கின்றது.