தயிருடன் இவற்றை மறந்தும் சாப்பிடாதீங்க! பாரிய விளைவை ஏற்படுத்தும்
தயிர் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும் நிலையில், கோடை காலத்தில் தயிரை அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்ள அதிகம் உதவி செய்கின்றது.
ஆனால் சில தருணங்களில் தயிருடன் வேறு உணவுகளை சாப்பிட்டால் அவை ஒவ்வாமையை ஏற்படுத்தும். வயிற்றுப்போக்கு, வாந்தி, செரிமானம் பிரச்சினையும் ஏற்படும்.
தயிருடன் எதை சாப்பிடக்கூடாது?
மீனுடன் தயிரை சாப்பிடுவதை தவிர்க்கவும். தயிர் மற்றும் மீன் இரண்டிலும் புரோட்டீன்கள் நிறைந்துள்ளதால் அஜீரணம் மற்றும் இரப்பை கோளாறு ஏற்படும்.
எண்ணெய்யில் வறுத்த பொருட்களுடன் தயிரை சேர்த்து சாப்பிட்டால், செரிமானம் பாதிக்கும்... சோம்பலை ஏற்படுத்தும்.
இதே போன்று தயிரில் வெங்காயத்தை சேர்த்து சாப்பிடுவதும் பிரச்சினை ஆகும்.அமிலத்தன்மை, வாந்தி, அரிக்கும் தோலழற்சி, சொரியாசிஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
பால் மற்றும் தயிரை இவற்றினை ஒன்றாக சாப்பிடாதீர்கள். இவற்றை ஒன்றாகச் சேர்த்து சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு, வயிற்று உப்புசம், வாயு போன்ற செரிமான பிரச்சனை உண்டாக்கும்.
மாம்பழத்துடன் தயிரை தவறுதாகக் கூட எடுத்துக்கொள்ள வேண்டாம். இவை நச்சுத்தன்மையை உண்டாக்குமாம்.
தயிருடன், ஆரஞ்சு, அன்னாசி, சுண்ணாம்பு, எலுமிச்சை போன்ற பழங்களிலும் புளிப்புத் தன்மை கொண்ட பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டாம்.