உங்களுக்கு சிறுநீரங்களில் பிரச்சினையா? இந்த உணவுகளை எடுத்துக்கோங்க
உடல் உறுப்புக்கள் அனைத்துமே முக்கியத்துவம் வாய்ந்தவைதான். அதிலும் குறிப்பாக சிறுநீரகங்கள். உடலில் சேரும் கழிவுகள், நச்சுக்களை வெளியேற்றுவதன் மூலம் இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகின்றன.
தற்பொழுது வயது வித்தியாசமின்றி யாரைப் பார்த்தாலும் சிறுநீரக நோயின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகின்றது. இதனைத் தடுக்க உடற்பயிற்சி செய்தல், போதுமான அளவு தண்ணீர் குடித்தல் போன்ற செயற்பாடுகள் காணப்பட்டாலும் உணவிலும் கவனம் செலுத்தியாக வேண்டும்.
இனி சிறுநீரகங்களை ஆரோக்கியமாக பாதுகாத்து, சிறுநீரக பிரச்சினைகளிலிருந்து வெளிவர என்னென்ன உணவுகளை உண்ணவேண்டும் எனப் பார்க்கலாம்...
வெங்காயம் - இதில் விட்டமின் சி,பி மற்றும் நார்ச்சத்துக்கள் காணப்படுவதால் சிறுநீரகங்களை வலுப்படுத்தக் கூடியவை.
முட்டைக்கோஸ் - இதில் கரையாத நார்ச்சத்தும் விட்மின் சி,கே உள்ளிட்ட விட்டமின்களும் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சினையிலிருந்து தீர்வு தரும்.
வெள்ளைப் பூண்டு - இதில் விட்டமின் சி, பி6 போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது மட்டுமில்லாமல் உடல் உறுப்புக்கள் அனைத்துக்கும் நன்மை செய்யும்.
அப்பிள் - புரதச்சத்து நிறைந்துள்ளதால், சிறுநீரகங்களுடன் தொடர்புடைய ஆபத்தான காரணிகளை தடுக்க உதவும்.
காலிஃப்ளவர் - அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் சிறுநீரக நோய் அபாயங்களை தவிர்க்கலாம். இதில் விட்டமின்கள் சி,கே,பி, நார்ச்சத்து என்பனவும் அடங்கும்.
முட்டையின் வெள்ளைக் கரு - முட்டையில் புரதச் சத்து அதிகமாக உள்ளதால் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
பெர்ரி பழங்கள் - அன்டி ஆக்சிடன்டுகள் நிரம்பியுள்ளதால், சிறுநீரகங்களின் நலன் காக்க உதவும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு - உடல் எடையைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கக்கூடிய இதில் விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளடங்கியுள்ளன.