மழைக்காலத்தில் எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்?
மழைக்காலங்களில் நாம் கட்டாயமாக எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு வகைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வொம்.
மழைக்காலம்
பொதுவாக மழைக்காலம் வந்துவிட்டாலே நோய்களும் வரிசைக்கட்டி வந்துவிடுகின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நோயினால் அவதிப்படும் நிலை ஏற்பட்டு விடுகின்றனர்.
மழைக்காலம் வந்துவிட்டாலே ஜில்லென பொழியும் சாரல் மழையுடன் சேர்த்து காய்ச்சல், ஜலதோஷம், சளி, இருமல், தொண்டை வலி போன்ற தொற்றுக்களும் கிடைக்கிறது. காற்றில் உள்ள ஈரப்பதம், ஈரமான உடைகள் மற்றும் காலணிகள் ஆகியவை பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகள் பெருக காரணமாகிறது. இதனால் ஏராளமான தொற்று நோய்கள் ஏற்படுகின்றன.
மழைக்காலத்தை நீங்கள் மகிழ்ச்சியுடன் அனுபவிக்க வேண்டும் என்றால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய சில உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம்.
மேலும் இத்தருணங்களில் வெளியிடங்களிலும் உணவு உட்கொள்வதையும், வாங்குவதையும் கட்டாயம் தவிர்த்து வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது மிகவும் முக்கியமாகும்.
எனவே மழைக்காலத்திற்கு ஏற்ற உணவுகளை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த உணவுகளில் உள்ள சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் தொற்று நோய்களை எதிர்த்து போராடும் திறனை மழைக்காலங்களில் வழங்குகிறது.
ஆனால் இறைச்சி, முட்டை மற்றும் மீனுடன் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து சாப்பிடுவதை குறைக்க வேண்டும். மழைக்காலத்தில் இறைச்சி உணவுகளை அதிகளவில் எடுத்துக் கொள்வது உங்களுக்கு சீரண பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
அந்த வகையில் மழைக்காலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டிய சில உணவு பொருட்களை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.
என்னென்ன உணவுகள் எடுத்துக் கொள்ளலாம்?
வெந்தயம் மற்றும் சீரகம்
மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியானது குறைய ஆரம்பிக்கும் நிலையில், நாம் உண்ணும் உணவுகள் செரிமானம் ஆகாமலும் இருக்கின்றது. எனவே செரிமான மண்டலம் சீராக இயங்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் சீரகம் மற்றும் வெந்தயத்தை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பருவகால பழங்கள்
ஆப்பிள், ஜாமூன், லிச்சி, பிளம்ஸ், செர்ரி, பீச், பப்பாளி, பேரிக்காய் மற்றும் மாதுளை ஆகியவை உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகின்றது. பருவகாலங்களில் கிடைக்கும் பழங்களை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அத்தருணத்தில் வரும் நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்கும். தர்பூசணி, முலாம்பழம் போன்ற நீர்ச்சத்து பழங்களை தவிர்க்கவும்.
சூப் மற்றும் தேநீர்
மழைக்காலத்தில் தேநீர் எப்போதுமே இதமான உணர்வு தரக்கூடியது. எனவே க்ரீன் டீ, பிளாக் டீ, மசாலா டீ என உங்களுக்குப் பிடித்த தேநீரை பருகலாம். பால் சேர்க்காமல் அருந்துவது சிறப்பு.
இதே போன்று பிடித்தமாக காய்கறிகள், சிறுதானியங்கள், பருப்பு வகைகளைச் சேர்ந்து மழைக்காலத்திற்கு உங்களுக்கு பிடித்தமான சூப்பையும் வைத்து சாப்பிட வேண்டும். இதுவும் உங்களது உடம்பிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கின்றது.
தயிர் மற்றும் மோர்
மழைக்காலங்களில் பாலை விட தயிர் மற்றும் மோர் சாப்பிடுவது நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் மழைக்கால ஈரப்பதம் காரணமாக பாலை சரியான முறையில் கொதிக்க வைக்கவில்லை என்றால் பாக்டீரியா மற்றும் நோய்க்கிருமிகள் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் தயிர் மற்றும் மோரில் புரோபயாடிக் எனப்படும் பாக்டீரியா உள்ளதால் இது செரிமானத்திற்கு உதவுகிறது.
கசப்பான உணவுகள்
சுண்டைக்காய், வேப்ப விதைகள், டேன்டேலியன் கீரைகள் மற்றும் மூலிகை தேநீர் போன்ற உணவுகள் நச்சுகளை அகற்றுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.
இந்த உணவுகளில் கால்சியம் மற்றும் இரும்பு போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ளன. ஏனெனில் மழைக்காலத்தில் ஏற்படும் தொற்றுநோய், ஒவ்வாமை ஆகியவற்றை எதிர்த்து போராடுவதற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கின்றது.
வீட்டில் தயாரிக்கப்படும் ஜுஸ்
மழைக்காலத்தில் ஜுஸ் பருகலாமா என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும். ஆனால் ஜுஸ் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படுவதுடன், நோய்களிலிருந்து பாதுகாக்கவும் செய்கின்றது. ஆனால் சர்க்கரை மற்றும் ஐஸ் கட்டி இவற்றினை சேர்த்துக் கொள்ளக்கூடாது.
ஆப்பிள் ஜூஸ் கல்லீரல் நச்சுக்களை அகற்றுகிறது, ஆரஞ்சு ஜூஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
Image courtesy: Shutterstock
காய்கறிகள்
மழைக்காலங்களில் காய்கறிகளில் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் இருக்கும் நிலை ஏற்படும் என்பதால் இதனை பச்சையாக சாப்பிடுவதை தவிர்த்து வேக வைத்து சாப்பிட வேண்டும்.
காய்கறிகளில் அதிக புரதம், நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் முகப்பரு போன்றவற்றை குறைக்கின்றது.
இஞ்சி மற்றும் பூண்டு
அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற பண்புகள், பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு ஆகியவை இஞ்சி மற்றும் பூண்டில் நிறைந்துள்ளதால், அவை காய்ச்சல் மற்றும் குளிரில் இருந்து விடுபட உதவுகிறது.
காய்ச்சல் சளியிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, தினமும் ஒரு பல் பூண்டை பச்சையாகவோ, சூப்பில் சேர்த்தோ அல்லது பாலுடன் சேர்த்து எடுத்து வாருங்கள். இதனால் உங்களின் நோயெதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரிக்கும்.
இஞ்சி டீ தொண்டையில் ஏற்படும் அசௌகரியத்தை போக்க உதவும், அதேசமயம் ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இஞ்சி சாறுடன் சில துளிகள் தேன் கலந்து கொடுக்கலாம்.
ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள்
தண்ணீர் மற்றும் உணவு மூலம் மழைக்காலத்தில் தொற்றுக்கள் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. ஆகவே சற்று சூடாகவே உணவு மற்றும் தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட ஒமேகா 3 போன்ற கொழுப்பு அமிலங்களை எடுத்துக் கொள்ளலாம்.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மீன், இறால், சிப்பிகள், அக்ரூட் பருப்புகள், பிஸ்தா, சியா விதைகள், ஆளி விதைகள் மற்றும் பிற கொட்டைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களில் காணப்படுகின்றன.
மஞ்சள்
மஞ்சள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, நோய்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்புத் தரும். எனவே அந்த மஞ்சளை அனைத்து உணவிலும் சேர்ப்பதோடு, தினமும் இரவில் சூடான பாலுடன் சேர்த்து கலந்து குடித்து வாருங்கள்.
கிழங்கு வகைகள்
சேனைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு மற்றும் சில வகை காய்கறிகளை எடுத்துக் கொள்ளுங்கள். சேப்பங்கிழங்கு இலை வடை, புளிச்ச கீரை, அரைக்கீரை போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ளவும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Image courtesy: Shutterstock
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |