காரசாரமான சுண்டக்காய் வத்தல் குழம்பு இப்படியும் செய்யலாமா?
வத்தல் குழம்பு என்றால் எல்லோருக்கும் பிடிக்கும் இதை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள்.
இன்றைய சமையல் ரெசிபி பகுதியில் சுண்டக்காயை வைத்து எப்படி சுண்டங்காய் வத்தல் குழம்பு செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சுண்டக்காய் வத்தல் - 1 கப்
- சின்ன வெங்காயம் - 10
- புளி - 75 கிராம்
- வரமிளகாய் - 4
- மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
- அரிசி - 1 டேபிள் ஸ்பூன்
- கொத்தமல்லி விதைகள் - 2 டேபிள் ஸ்பூன்
- துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
- கருப்பு மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
- வெந்தயம் - 2 டீஸ்பூன்
- பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்
- வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்
- நல்லெண்ணெய் - தேவையான அளவு
- கறிவேப்பிலை - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- கடுகு - 1 டீஸ்பூன்
- கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
செய்யும் முறை
முதலில் புளிக்ரைசலை தயாரித்து அதை வடிகட்டி தனியே எடுத்து வைக்க வேண்டும். பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் வெந்தயத்தை போட்டு நன்றாக வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.
இந்த வறுத்த வெந்தயத்தை ஒரு மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
பின்னர் வெந்தயம் வறுத்த பாத்திரத்தில் கொத்தமல்லி விதைகள், அரிசி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கருப்பு மிளகு மற்றும் வரமிளகாய் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து எடுத்து ஆறவிடவும்.
வறுத்த அனைத்தும் நன்கு ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு நன்கு பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு கொள்ளவும்.
கடுகு வெடித்ததும் உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து தாளித்து அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் சுண்டக்காய் வத்தல் சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் அரைத்து வைத்துள்ள வெந்தயப் பொடியை சேர்த்து கிளறி விடவும். பின்னர் இதில் புளிக்கரைகலை சேர்த்து கிண்டி விடவும்.
பின்னர் அதில் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், வெல்லம், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
கொதிக்க விட்டதன் மேல் நல்லெண்ணை கொஞ்சமாக ஊற்றி இறக்கினால் சுண்டக்காய் வத்தல் குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |