மறந்தும்கூட சாப்பிட்டவுடன் இதையெல்லாம் செய்யாதீங்க
உணவு என்பது நிம்மதியாகவும் பொறுமையாகவும் உண்ண வேண்டிய ஒன்று.
உண்ணும்போது நாம் சில விடயங்களை கடைபிடிக்க கடமைப்பட்டுள்ளோம். அதாவது, நின்றுகொண்டு உண்ணக் கூடாது, இடையிடையே நீர் அருந்தக் கூடாது என்று கூறுவர்.
அதேபோல் உணவை உண்டதன் பின்னரும் கடைபிடிக்க வேண்டிய பல விடயங்கள் உள்ளன. அவற்றை பார்ப்போம்.
சாப்பிட்டவுடன் குளிக்கக் கூடாது. ஏனென்றால், குளிக்கும்போது இரத்த ஓட்டம் அதிகரிக்கும். எனவே இரைப்பை செரிமானத்துக்கு தேவையான இரத்த ஓட்டம் குறையும்.
சாப்பிட்டவுடன் உடனே பழங்கள் சாப்பிடக் கூடாது.
சாப்பிட்டவுடன் புகைப்பிடித்தல் சாதாரண நேரத்தில் புகைப்பதை விட பெரிய பின்விளைவை ஏற்படுத்தும்.
சாப்பிட்டவுடன் தேநீர் அருந்துதலும் கூடாது. இது செரிமானத்தை கஷ்டப்படுத்தும்.
அதேபோல் உணவு உண்ட உடனே நித்திரைக்குச் செல்லக் கூடாது. குறைந்தது அரைமணி நேரம் கழித்து உறங்கச் செல்வது நல்லது.