சுவையான ஃபிங்கர் சிக்கன்- எளிமையாக வீட்டிலேயே செய்வது எப்படி?
அசைவ பிரியர் என்றால் சிக்கன் பிடிக்கத்தவராக இருக்க வாய்ப்பில்லை. அப்படி நீங்கள் வித்தியாசமான, சுவையான ஒரு ரெபியை ருசிக்க விரும்பினால், ஃபிங்கர் சிக்கன் ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
ஃபிங்கர் சிக்கன் செய்வது எப்படி என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,
தேவையான பொருட்கள்
- சிக்கன் (எலும்பு இல்லாதது) - 1/2
- தேங்காய் எண்ணெய்/ஆலிவ் ஆயில் - 2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- பிரட் தூள் - கப்
- மிளகு - 1 டீஸ்பூன்
- வெங்காய தூள் - 1 டீஸ்பூன்
- முட்டை - 1
- எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
- பூண்டு - 5 துண்டு
- பார்மேசன் சீஸ் - 1/4 கப்
- இஞ்சி - 1 துண்டு
- மைதா மாவு - 1/2 கப்
- தயிர்
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்.
செய்முறை
முதலில் சிக்கனை நன்கு கழுவி, நீள நீளமாக வெட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு நுரை பொங்க அடித்துக் கொள்ளவும்.
அடுத்து, இஞ்சி பூண்டை நன்றாக அரைத்து கொள்ளவும். ஒரு பவுலில் சிக்கன், தயிர், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு, மிளகு தூள் போட்டு கலக்கி ஃப்ரிட்ஜில் வைத்து ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பை சேர்த்து நீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும். சிக்கன் துண்டுகளை மைதா கலவையில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சுமார் 8 முதல் 10 நிமிடங்கள் வேக விடவும். பின்னர் எண்ணெய்யில் இருந்து பொரித்தெடுத்து, இதன்மீது எலுமிச்சை சாறினை பிழிந்து விடுங்கள், சுவையான ஃபிங்கர் சிக்கன் ரெடி.