மசாலா அரைத்து ஓட்டல் சுவையில் சாம்பார் செய்வது எப்படி? 5 நிமிட ரெசிபி இதோ...
பாரம்பரிய வழக்கப்படி கையிலேயே மசாலாக்களை இடித்து , அரைத்து சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- துவரம் பருப்பு - 1/3 கப்
- புளி - எலுமிச்சை அளவு
- சாம்பர் வெங்காயம் - 10 - 12
- காய்கறிகள் - உங்கள் விருப்பம் (முருங்கை,கத்தரிக்காய், கேரட், பீன்ஸ்...)
- மஞ்சள் பொடி - 1/4
- உப்பு - தேவையான அளவு
- வறுக்க தேவையான பொருட்கள் தனியா - 1 தேகரண்டி
- கடலை பருப்பு - 2 தேகரண்டி
- காய்ந்த மிளகாய் - 4
- வெந்தையம் - 1/8தேகரண்டி
- துருவிய தேங்காய் - 1 தேகரண்டி
தாளிக்க தேவையான பொருட்கள்
- எண்ணெய் அல்லது நெய் - 1 தேகரண்டி
- கடுகு - 1/4 தேகரண்டி
- வெந்தையம் - 1/8 தேகரண்டி
- பெருங்காயப் பொடி - ஒரு சிட்டிகை
- கருவேப்பிலை - 5 இலைகள்
செய்முறை
முதலில் புளியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வையுங்கள். பின் புளிக்கரைசலை தனியாக பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
பின் குக்கரில் துவரம் பருப்பு மைய மசியுமாறு 5 விசில் வரை விட்டு வேக வைக்கவும். இதற்கிடையில் கடாயில் எண்ணெய் இல்லாமல் வறுக்க வேண்டிவற்றை வறுத்து எடுத்துக் கொள்ளவும். சூடு ஆறியதும் மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும்.
சமையலுக்கு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகை தாளிக்கவும். அடுத்ததாக வெந்தையம் , பெருங்காயப் பொடி, கருவேப்பிலை சேர்க்கவும்.
அடுத்ததாக தோல் உறித்த சாம்பார் வெங்காயம் சேர்த்து வதக்கவும். அடுத்ததாக காய்கறிகளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின் புளிக் கரைசல், மஞ்சள் பொடி மற்றும் உப்பு சேர்க்கவும். அதில் காய்கறிகள் வேகும் வரைக் கொதிக்க விடவும்.
காய்கறிகள் வெந்ததும், வேகவைத்த துவரம் பருப்பு, மிக்ஸியில் அரைத்த பொடி ஆகியவற்றை சேர்த்து நன்குக் கலக்கி விடவும்.
அதோடு ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும். சிறு தீவில் வைத்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
கொஞ்சம் கெட்டியான பதம் வந்ததும் சாம்பாரை இறக்கி விடவும். சாம்பார் அதிக கட்டியாகவும் இருக்கக் கூடாது.
தற்போது அருசுவையான அரைச்சு விட்ட சாம்பார் ரெடி.