ரத்தத்தின் சக்கரை அளவை குறைக்கணுமா? அப்போ கோதுமை மாவுடன் இதை சாப்பிடுங்க
உலகளாவிய மக்களுக்கு இன்றைய கால கட்டத்தில் சக்கரை நோய் அதிகரித்து வரும் நிலையில் ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை எப்படி குறைக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ரத்த சக்கரை
சக்கரை நோயாளிகள் கோதுமையில் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடலாம் என கூறுவார்கள்.
ஆனால், அதிலும், குளூடன் எனப்படும் புரதம் இருப்பதால், சப்பாத்தி, ரொட்டியை தொடர்ந்து சாப்பிடும்போது, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என கூறுகின்றனர்.
இப்படி எப்போதும் ரொட்டி சப்பாத்தி சாப்பிடும் போது இதற்காக பிசையப்படும் மாவில் கொஞ்சமாக பாதாம் சேர்த்து சாப்பிட்டால் அது மிகவும் நன்மை தரும்.
தனம் ஒரு பாதாம் சாப்பிட்டு வந்தால் இதயத்திற்கு மிகவும் நன்மை அளிப்பதோடு ஆயுள்வேத மருந்தாகவும் செயல்படுகின்றது.
மாவுடன் பாதாமை கலந்து சாப்பிட்டால், உடல் மட்டுமின்றி, மூளையின் செயல்பாட்டுக்கும் உதவும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கோதுமை மாவுடன் பாதாமை கலந்து ரொட்டி அல்லது சப்பாத்தி சுடும்போது சுவை அதிகரிப்பதுடன், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்ற பிரச்சனையும் இருக்காது.
இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவியாக இருக்கும். பாதாமை மாவுடன் கலப்பதற்கு முன்பு, ஒரு நாள் முழுவதும் பாதாமை ஊற வைக்க வேண்டும்.
பின்னர், நாள் முழுவதும் உலர வைத்த பின்னர், நைசாக அரைத்து வைத்துக் கொண்டு, தேவைக்கேற்ப மாவில் சேர்த்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.