சம்மரில் எடை குறைக்க இந்த சூப்பர் பானங்கள் உதவும்: குடிச்சு பாருங்க!!
நமது உடம்பில் சேரும் கொழுப்புகளால் உடல் எடை அதிகரித்து பலவித நோய்களுக்கு காரணமாக அமைகின்றது. இதனை சரியான முறையில் அவதானித்து சரி செய்வது மிகவும் அவசியமாகும்.
அதிலும் கோடை காலத்தில் எடை இழப்புக்கு சில அணுகுமுறை தேவைப்படும் நிலையில், இத்தருணத்தில் நீரிழிப்பும் அதிகமாக உள்ளதால் சில வகையான பானங்களை நாம் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கோடை காலத்தில் உடல் எடையை இழக்க நாம் பருக வேண்டிய பானங்களை குறித்து தெரிந்து கொள்வோம்.
எடையை குறைக்கும் பானங்கள்
சுரைக்காய் சாறு குடிப்பதால் உடம்பில் உள்ள நச்சுக்கள் நீக்கி, செரிமான அமைப்பையும் சீராவதுடன், எடையையும் குறைத்து புத்துணர்ச்சி அளிக்கின்றது.
தினமும் காலை வெறும்வயிற்றில் கிரீன் டீ குடித்தால் கலோரிகள் வேகமாக எரித்து எடையை குறைக்கின்றது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
கலோரி குறைவாகவும், ஊட்டச்சத்து அதிகமாகவும் இருக்கும் இளநீரை குடிப்பதால் உடல் எடை குறைவதுடன், உடலுக்கு தேவையான நீர்ச்சத்தையும் கொடுக்கின்றது.
காலை எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை பழத்தை பிழிந்து, அதனுடன் கருப்பு உப்பு கலந்து குடித்தால் உடல் எடை நிச்சயம் குறையும்.
செரிமானத்தை சீராக்கவும், இயற்கையான வழியில் வாய்க்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன் உடல் எடை குறைக்கவும் சோம்பு நீர் உதவுகின்றது.
வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்கவும், செரிமானத்தை சீராக்கவும் ஓமத்தை இரவில் ஊற வைத்து காலையில் வடிகட்டி குடித்தால் மாற்றத்தை உணரலாம்.