உணவுப்போட்டியில் உணவை வேகமாக உண்ணும் போது உடலில் ஏற்படும் பாதிப்புக்கள் என்ன?
நாம் அன்றாடம் உணவு உண்பது எமது உடலின் சக்திக்காகும். நாம் உணவை எடுத்துக்கொண்டால் மட்டுமே நமது உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும். அந்த வகையில் அதிக உணவு உண்ணுதலே தற்போது ஒரு ஆபத்தாக மாறி உள்ளது.
அந்த வகையில் தற்போது இருக்கும் உணவு விடுதிகளில் மக்களை ஈர்ப்பதற்காக அதிக உணவு உண்ணும் போட்டியை ஆரம்பித்துள்ளனர். இந்த போட்டியில் குறுகிய நேரத்தில் அதிகளவன உணவை உண்ண வேண்டும்.
அப்படி உண்பதில் யார் அதிகமாக உண்கிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள். தற்போது சமூக வைத்தளங்களில் கூட இது சம்பத்தப்பட்ட வீடியோக்கள் அதிகம் பரவி மக்களை ஈர்த்து வருகின்றது.
ஆனால் இந்த பழக்க வழக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தராது. இப்படி அதிக உணவை குறுகிய நேரத்தில் உண்பதால் உடலில் என்ன என்ன பாதிப்புக்கள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் பார்வையிடலாம்.
பாதிப்புக்கள்
எந்த வகையான உணவாக இருந்தாலும் ஒரே நேரத்தில் அதிகமான உணவை எடுத்துக் கொள்வது உடலுக்கு ஆபத்தானது .இது தவிர இநடத போட்டியில் பங்கேற்றவர்கள் அவர்கள் வெல்ல வேண்டும் என்ற பதட்டத்தில் இருப்பாாகள் இந்த நேரத்தில் இவர்களின் இதயத்துடிப்பு மிகவும் வேகமாக அடித்துக்கொண்டிருக்கும்.
இந்த நேரத்தில் உணவு குழாய் மற்றும் வயிற்றுப்பகுதி தொந்தரவுக்கு உள்ளாகும். வேகஸ் எனும் நரம்பு உணவுக் குழாய்க்கு அருகிலேயே தொடர்ந்து இருக்கக் கூடிய நரம்பாகும். இந்த நரம்பு அதிக அளவு உணவு உள்ளே செல்லும் போது இதயத்தின் செயல்பாட்டை குறைக்கும்.
இதனால் தான் இந்த போட்டியில் கலந்துகொள்பவர்கள் உணவு உண்ணும் போது இழக்க நேரிடும்.நமது வாயினுள் இருக்கும் உணவை லாவகமாக உணவுக் குழாய்க்குள் அனுப்புவது நமது நாக்கு. ஒரு கடி சாப்பிட்டு, அடுத்த கடி சாப்பிடுவதற்குள்ளாக இது நடக்கும்.
அதிக உணவை வேகமாக எடுத்துக் கொள்ளும் போது, உணவுக்குழாய்க்கு பதிலாக நுரையீரலுக்கு செல்லும் சுவாசக் குழாயில் உணவு சென்றுவிட வாய்ப்புள்ளது. அந்த நேரத்தில் தண்ணீர் குடித்தால், உணவு சுவாசக் குழாயில் இன்னும் கீழ் இறங்கும்.
இதன் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தாகிவிடும்.எனவே குறுகிய நேரத்தில் அதிக அளவு உணவு உண்பது நமது உயிருக்கே ஆபத்தாக முடியும். இதை மருத்துவர்கள் ஆலோசிக்கின்றனர்.cணவை எப்போதும் நமக்கு போதுமான அளவு மென்று சாப்பிட வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |