ஓட்டல் சுவையில் சில்லி இட்லி.... வெறும் 3 நிமிடத்தில் சுவைக்கலாம்!
இட்லி என்றாலே குழந்தைகளுக்கு பிடிக்காது.
இட்லியையே இப்படி சற்று வித்தியாசமாக செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
சில்லி இட்லி செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
- இட்லி - 12
- தக்காளி சாஸ் - 4 ஸ்பூன்
- கறிவேப்பிலை - 2 கொத்து
- கொத்தமல்லி - 2 கொத்து
- சில்லி சிக்கன் மசாலா - 1 மேசைக்கரண்டி
- உப்பு - ஒரு தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் - 2
- கரம்மசாலா தூள் - அரை ஸ்பூன்
- எண்ணெய் - பொரிக்க
- வெங்காயத்தாள் - சிறிதளவு
- குடமிளகாய் - 1 சோயா சாஸ் - 2 ஸ்பூன்
செய்முறை
இட்லியை வேக வைத்து ஆறியதும் துண்டுகளாக வெட்டி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.
பின்னர் வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ள வேண்டும்.அத்துடன் கொத்தமல்லி, வெங்காயத்தாள், குடமிளகாயை துண்டாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் போட்டு வதக்கவேண்டும்.
அதன் பிறகு அதில் துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள குடமிளகாயை போட்டு வதக்க வேண்டும். அத்துடன் உப்பு, சில்லிப் பவுடர், தக்காளி சாஸ், சோயா சாஸ், கரம் மசாலா தூள் போட்டு நன்கு கிளறி விட்டு இரண்டு நிமிடங்கள் வேகவிடவும்.
பிறகு அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி மேலே தூவி கிளறவும்.
இப்போது பொரித்து வைத்துள்ள இட்லியை போட்டு கிளறி விடவும். மசாலா இட்லியில் சேரும்படி நன்கு பிரட்டி விட வேண்டும்.
இதனை சுமார் ஒரு நிமிடம் வேகவிட்டு, வெங்காயத்தாள் சேர்த்து கிளற வேண்டும். மசாலா இட்லியில் இறங்கியுள்ளதா என்று பார்த்து, இறக்கினால் சுவையான சில்லி இட்லி தயார்.