ரத்தச்சோகையை தடுக்கும் Folic Acid மாத்திரைகள்
ரத்தச்சோகைக்கு சிகிச்சையளிக்க அல்லது தடுக்க பயன்படுத்தப்படுகிறது.
நமது உடலில் ஹீமோகுளோபின் அளவை சரிசெய்ய மருத்துவர்கள் இரும்புச்சத்து மாத்திரைகளை பரிந்துரைப்பார்கள்.
இதனுடன் போலிக் ஆசிட் மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ள சொல்வார்கள்.
காரணம் இதில் வைட்டமின் பி அதிகம் உள்ளது, வைட்டமின் பி குறைந்தால் ரத்தச்சோகை ஏற்படும்.
இதை தடுக்கவும், சிகிச்சையளிக்கவும் Ferrous Sulphate and Folic Acid மாத்திரைகள் பயன்படுத்தப்படுகிறது.
மிக முக்கியமாக கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு போலிக் ஆசிட் மாத்திரைகள் கொடுக்கப்படும். வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு இது மிகவும் இன்றியமையாத ஒன்று.
கர்ப்பத்திற்கு திட்டமிடும் பெண்களுக்கும், கரு தங்காமல் சிரமப்படும் பெண்களுக்கும் போலிக் ஆசிட் மாத்திரைகள் மருத்துவர்களால் வழங்கப்படும்.
கர்ப்பமாவதற்கு திட்டமிடுவதாக இருந்தால் 4 வாரங்களுக்கு முன்பிருந்து போலிக் ஆசிட் மாத்திரைகளை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.
மிக முக்கியமாக கருவில் உள்ள குழந்தைகளின் நரம்பு மண்டலம் உருவாக போலிக் ஆசிட் மாத்திரைகள் உதவுகிறது.
கரு உருவாகத் தொடங்கியதிலிருந்து நான்காவது வாரத்தில் நரம்பு மண்டலம் உருவாதல் நடக்கும், இது சரியானதாக இல்லாத பட்சத்தில் கரு கலைந்துவிட வாய்ப்புகள் உண்டு.
இதனை தடுப்பதற்கும் போலிக் ஆசிட் உதவுகிறது, எனவே கர்ப்பிணிகள் தவறாது முதல் மூன்று மாதங்களுக்கு மருத்துவரின் அறிவுரைப்படி போலிக் ஆசிட் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளவும்.
பக்கவிளைவுகள்
Ferrous Sulphate and Folic Acid மாத்திரைகளை பயன்படுத்துவதால் கடுமையான பக்கவிளைவுகள் ஏதும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
எனினும் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்தம் குறையத் தொடங்கலாம்.
எனினும் ஒவ்வொரு நபருக்கும் பக்கவிளைவுகள் வேறுபடலாம் என்பதால், உங்களுக்கு ஏதேனும் தொந்தரவுகள் இருக்கும் பட்சத்தில் மருத்துவரிடம் கலந்து ஆலோசிக்கவும்.
அதிக கொழுப்பு உணவுகளுடன் போலிக் ஆசிட் மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் உடல் எடை அதிகரிக்கத் தொடங்கலாம்.
தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் தாராளமாக போலிக் ஆசிட் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம், இது எந்தவிதத்திலும் குழந்தையை பாதிக்காது.