பீட்ரூட்டினால் உருவாகும் ரோஜா மலர்கள்! கண்களிற்கு குளிர்ச்சியான காணொளி
தொழில் சார்ந்த கலைகள் கைவினைக் கலைகள் ஆகும். இவை தொழில், பொழுதுபோக்கு, புராதன மரபு போன்று பல வழிகளில் மாறுபடுபவையாகவே காணப்படுகின்றது.
பெரும்பாலும் இவை கிராமப்புறங்களில் வாழும் மக்கள் தங்கள் அன்றாடப் பிழைப்புக்காக தங்களுக்கு அருகில் கிடைக்கும் மூலப் பொருட்களைக் கொண்டு பயன்பாட்டுப் பொருட்களைத் தயாரிப்பதும் வழக்கம்.
அந்த வகையில் ,சில பாவனைக்கு உதவும்,உதவாத பொருட்களை கொண்டு தற்போது சில செதுக்கல் வேலைகளும் பொழுது போக்காக மேற்கொள்ளப்படுகின்றது.அவை சில சமயம் பொருளாதாரத்திற்கும் வித்திடுகின்றது.
அந்த வகையில்,உணவுக்காக பயன்படுத்தப்படும் பீட்ரூட் கிழங்கினை பயன்படுத்தி அழகான ரோஜா மலர்களும் உருவாக்கப்படுகின்றது. இவை பார்ப்பவர்களின் கண்களிற்கு குளிர்ச்சியினையும் தந்துள்ளது.