தொப்பை தொல்லையை கைபிடி அளவில் குறைக்கும் பழங்கள்.. தினமும் சாப்பிடலாமா?
பொதுவாக ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் வயிறு தட்டையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
தற்போது இருக்கும் தவறான உணவு பழக்கங்களால் இதனை பெறுவது அவ்வளவு சாத்தியமானதாக இருக்காது.
ஆகையால் இப்படி தட்டையான வயிற்றை பெற வேண்டும் என்றால் குறிப்பிட்ட சில பழங்களை கைபிடி அளவு எடுத்து தினமும் சாப்பிட வேண்டும்.
அந்த வகையில், நாம் தினமும் எடுத்து கொள்ள வேண்டிய பழங்கள் பற்றி தொடர்ந்து பதிவில் தெரிந்து கொள்வோம்.
1. ஆப்பிள்
இந்த பழம் சாப்பிடுவதால் அதிகமான நார்ச்சத்துக்கள் வயிற்றுக்குள் செல்கின்றன. இது வயிற்றை சுத்தப்படுத்தி செரிமானத்தை இலகுவாக்குகின்றது.
மேலும் ஆப்பிளில் பாலிபினால்கள் உள்ளன. இது கொழுப்பின் வளர்சிதையை பாதிக்கும். இதனால் கொழுப்பு சேமிக்கப்படுவது தடுக்கப்படுகிறது.
2. வாழைப்பழம்
வாழைப்பழங்களில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது வயிற்றில் நீண்ட நேரம் இருந்து பசியை கட்டுபடுத்தும். அளவிற்கு அதிகமாக உணவு எடுத்து கொள்ளும் பழக்கமுள்ளவர்கள் அடிக்கடி வாழைப்பழங்களை எடுத்து கொள்ளலாம்.
அத்துடன் இன்சுலின் சென்சிட்டிவிட்டியை அதிகரித்து இலகுவாக கொழுப்பை கரைக்கும். டயட் பிளானில் இருப்பவர்கள் வாழைப்பழத்தை காலையுணவுடன் எடுத்து கொள்ளலாம்.
3. தர்பூசணி
தர்பூசணியில் அதிகப்படியான நீர்ச்சத்துக்கள் உள்ளன என்பது யாமறிந்த விடயங்களில் ஒன்று. இது வயற்றின் நீர்ச்சத்து தேவையை பூர்த்திச் செய்கிறது. உடல் பருமன் அதிகம் உள்ளவர்களுக்கு இந்த பழத்தை எந்தவித தயக்கமின்றி எடுத்து கொள்ளலாம்.
ஏனெனின் சிட்ருலின் என அழைக்கப்படும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இது செல்களில் இருக்கும் கொழுப்பை கரைக்கிறது. தினமும் ஒரு துண்டு சாப்பிட்டால் உங்கள் வயிற்றை தட்டையாக்க முடியும்.
4. ஆரஞ்சு பழம்
பொதுவாக ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் இருக்கிறது. இதனால் உடல் கொழுப்பை இலகுவாக கரைக்கிறது. இந்த செயன்முறையால் உங்கள் இடுப்பு பகுதி வளைவாகும்.
ஆரஞ்சி பழங்களில் இருக்கும் இயற்கையான சர்க்கரை பசியை வருவதை கட்டுபடுத்தும். இதனால் தொப்பை தொல்லை இனி இருக்காது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |