40 வயது கடந்த ஆண்களை தாக்கும் ஐந்து வகை நோய்! குணமாக்கும் சூப்பரான பாட்டி வைத்தியம்..
பொதுவாக வீடுகளில் இருக்கும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு அடிக்கடி சின்ன உடல்நிலைக் கோளாறுகள் ஏற்படும்.
இதற்கு என்ன மருந்து போடலாம் என சிந்தித்து விட்டு மருத்துவமனைக்கு கூடிச் செல்லும். இது போன்று சின்ன சின்ன காரணங்களுக்காக மருத்துவமனைக்கு செல்ல வேண்டியது இல்லை.
மாறாக வீட்டிலுள்ள சில பொருட்களைக் கொண்டு நொடிப்பொழுதில் நிரந்தரமாக தீரக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா?
ஆம், அது உண்மை தான் வீட்டிலுள்ள சில பொருட்களை கொண்டு வீட்டு வைத்தியம் செய்வதால் பாரியளவு மாற்றமும் ஏற்படும்.
அந்த வகையில் வீட்டிலுள்ள மூலிகைப் பொருட்களை கொண்டு எவ்வாறு பாட்டி வைத்தியம் செய்வது குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
ஆண்களை குறி வைக்கும் ஐந்து வகையான நோய்கள்
1. மூலநோய்
பொதுவாக வயதானவர்களுக்கு இந்த நோய் இருக்கும். இவர்கள் வெளியில் செல்வதற்கு கூட அதிகம் கஷ்டப்படுவார்கள். இதற்கு கருணைக் கிழங்கை கொஞ்சம் எடுத்து கொண்டு அதனுடன் சிறிதளவு துவரம் பருப்பு சேர்த்து சாம்பார் போன்று வைத்து சாப்பிடுதல் அவசியம் இவ்வாறு செய்வதால் காலப்போக்கில் மூல பிரச்சினை குணமாகும்.
2. மூக்கடைப்பு
நமது நெஞ்சுப்பகுதியில் சளி அதிகரிக்கும் போது மூக்கடைப்பு பிரச்சினை ஏற்படும். இதனால் சிலர் மூச்சை வெளியேற்றுவதற்கு கூட தடுமாறுவார்கள். இவ்வாறு பிரச்சினையுள்ளவர்கள் தோல் நீக்கி ஒரு துண்டு சுக்கை அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து அதனுடன் கொஞ்சம் சக்கரை கலந்துக் குடித்து வர வேண்டும். இவ்வாறு செய்வதால் மூக்கடைப்பு பிரச்சினை முற்றாக நீங்கும்.
3. வரட்டு இருமல்
சிலருக்கு அதிகம் புகைத்தல் காரணமாகவும் நெஞ்சுப்பகுதியில் அதிகம் சளி இருப்பதாலும் வரட்டு இருமல் ஏற்படும். இந்த பிரச்சினை அதிகரிக்கும் போது இரத்தம் சிந்துவதற்கான வாய்ப்புகள் கூட இருக்கலாம்.
இதற்காக சிலர் மருத்துவர்களை நாடுவார்கள். ஆனால் இது ஒரு சரியான தீர்வாக இருக்காது. அதனால் வீட்டிலுள்ள எலுமிச்சையை எடுத்து அதன் சாற்றை வேறாக்கி, தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் காலப்போக்கில் வரட்டு இருமல் பிரச்சினை குணமாகும்.
4. தோல்களில் ஏற்படும் தேமல்
தேமல் பொதுவாக ஆண்கள், பெண்கள் என இருப்பாலாருக்கும் இருக்கும் இதனால் இவர்களின் தோற்றம் வெளியிலுள்ளவர்கள் மத்தியில் அறுவருக்கப்படலாம். இதனால் தோல்களில் இருக்கும் ஒரு வகை பங்கசான தேமலை அகற்ற வேண்டும் என்றால், வெள்ளை பூண்டை வெற்றிலையுடன் சேர்த்து அரைத்து தேமல் உள்ள இடங்களுக்கு பூசிக் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் சுமார் 2 வாரங்களில் தேமல் பிரச்சினை இருந்து இடம் தெரியாமல் மறைந்து போகும்.
5. மூச்சிப்பிடிப்பு தொல்லை
மூச்சிப்பிடிப்பு தொல்லை பிரச்சினை சுமாராக 40 வயது கடந்த ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் ஏற்படும். இது கடினமான பொருட்களை அதிக பலம் கொடுத்து தூக்குவதால் ஏற்படும் அல்லது வழுக்கி எதும் விழுந்தால் இவ்வாறு முதுகுப்பகுதி பிடித்துக் கொள்ளும். இதற்காகவே மருந்தகங்களில் மூச்சிப்பிடி வில்லை என்ற மருந்து விற்கப்படுகிறது.
இந்த மருந்து தற்சமயம் மற்றும் நோயை கட்டுபாட்டில் வைக்க உதவிச் செய்கிறது. இதனை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்றால், சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் ஆகியவற்றை சம அளவு எடுத்து கொண்டு வடித்த கஞ்சியில் சேர்த்து மீண்டும் சுட வைக்கவும் மூச்சிப்பிடிப்பு தொல்லை இருக்கும் இடத்தில் மூன்று வேளைகளும் தடவினால் காலப்போக்கில் இந்த பிரச்சினை குணமாகும்.