பேரதிர்ச்சி... விபத்தில் பலியான நடிகர் சுஷாந்த் சிங்கின் உறவினர்கள் - கடும் சேகாத்தில் ரசிகர்கள்
பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் நடைபெற்ற சாலை விபத்தில், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.
சுஷாந்த் தோனியின் பயோபிக் திரைப்படத்தில் நடித்து நாடு முழுக்க புகழ் பெற்ற நடிகரானவர்.
அவர் கடந்த வருடம் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்தான், சுஷாந்த் சிங் ராஜ்புத் குடும்பத்தில் மற்றொரு சோகம் அரங்கேறியுள்ளது.
ஹல்சி காவல் நிலையத்தின் கீழ் உள்ள பிப்ராவில் நடுநிலைப் பள்ளி அருகே நடந்த விபத்தில் ஷாந்த் சிங்கின் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. சம்பவம் தொடர்பில் போலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.