30 ஆண்டுக்கு பின்பு குருவின் அதிர்ஷ்ட பார்வை! 2027ல் ராஜயோகம் பெறும் ராசிகள்
Jupiter Transit 2027: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால் ஐந்து ராசியினர் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர்.
குரு பெயர்ச்சி
ஜோதிடத்தில் குரு பகவான் கல்வி, ஞானம், செல்வம் அதிர்ஷ்டம் இவற்றிற்கு முக்கிய காரண கிரகமாக கருதப்படுகின்றார்.
அதே போன்று புதன் கிரகம் புத்திசாலித்தனம், வணிகம், கணக்கியல், தகவல் தொடர்பு, நிதி சார்ந்த செயல்பாடுகளுடன் தொடர்புடையதாக இருக்கின்றார்.
இந்த இரண்டு கிரகங்களின் தொடர்வும் ஜோதிட ரீதியாக பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.
அந்த வகையில் 2027ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி குரு பகவான் கடக ராசியில் அமைந்துள்ள ஆயில்யம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்க உள்ள நிலையில், புதன் அதிபதியாக இருக்கின்றார்.
ஆனால் இதில் குரு பயணிப்பது சில ராசியினருக்கு புதிய வாய்ப்புகளையும், வாழ்க்கையில் முன்னேற்றத்தினையும் அளிக்கும்.
குரு இந்த நட்சத்திரத்தில் 2027 ஜுன் மாதம் 26ம் தேதி வரை சஞ்சரிக்க உள்ளதாகவும், இதனால் எதிர்பாராத வகையில் அதிர்ஷ்டத்தினை பெறும் ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

மேஷம்
மேஷ ராசியினருக்கு குரு பகவான் ஆயில்யம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றத்தினை காண்பீர்கள்.
வங்கி, நிதி, காவல்துறை இவற்றில் பணிபுரிபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த விடயம் முடிவிற்கு வரும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகுவதுடன், நீண்டு காலமாக நிறைவேறாமல் இருந்த ஆசையும் நிறைவேறுமாம்.
உங்களது திறமையினை வெளிக்காட்டவும், புதிய விடயத்தினை கற்றுக்கொள்ளவும் இந்த காலக்கட்டம் சிறந்ததாக இருக்கின்றது.

கடகம்
கடக ராசியினருக்கு குருவின் நட்சத்திர சஞ்சாரம் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன், பொருளாதாரம், வேலை, குடும்பம் இவற்றில் படிப்படியாக முன்னேற்றமும் ஏற்படும்.
குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் முடிவிற்கு வருவதுடன், வீட்டில் சுப காரியங்கள் நடைபெறவும் வாய்ப்புள்ளது. உறவினர்களுடன் இருந்த கருத்துவேறுபாடு நீங்கி ஒற்றுமை அதிகமாகும்.
வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைப்பதுடன், பணியில் இருப்பவர்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும். தங்களது திறமையை வெளிக்காட்ட சரியான சந்தர்ப்பம் ஆகும்.
மேலும் நிதி தொடர்பான வேலையில் முன்னேற்றம், வருமானத்தில் முன்னேற்றம் என்பதை காணலாம். பேச்சில் நிதானத்தினை கடைபிடிப்பது மிகவும் முக்கியம் ஆகும். கடினமான பிரச்சனைக்கு இந்த காலக்கட்டத்தில் தீர்வு காண முடியும்.

ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு 2027ம் ஆண்டின் குரு சஞ்சாரம் தொழில் மற்றும் பொருளாதார முன்னேற்ற வாய்ப்புகள் உருவாவதுடன், வேலை தொடர்பாக எதிர்பார்த்த செய்திகள் வந்தடையும்.
பணி செய்யும் இடத்தில் புதிய பொறுப்பு, உழைப்பிற்கான உரிய அங்கீகாரம் கிடைப்பதுடன், சிலருக்கு பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
வியாபாரத்தினை விரிவு படுத்துவதற்கு சாதகமான சூழ்நிலையாக அமைகின்றது. சரியான திட்டமிடல் இருந்தால் லாபத்தினை பெறலாம்.
பொருளாதார நிலை படிப்படியாக மேம்படுவதற்கான சூழ்நிலை அமையலாம். தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன், புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும், எதிர்கால வளர்ச்சி திட்டங்களை வகுப்பதற்கும் உதவியாக இருக்கும்.

மீனம்
மீன ராசியினருக்கு இந்த சஞ்சாரத்தினால் தொழில் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த கனவு, ஆசை நிறைவேறும்.
பணியிடத்தில் உங்களது திறமைக்கு அங்கீகாரம் கிடைப்பதுடன், நிதி நிலையில் முன்னேற்றம் காணப்படும். தேவையற்ற செலவுகளை குறைத்து சேமிப்பது மிகவும் சிறந்தது.
சனியின் தாக்கத்தால் இருந்த மன அழுத்தம், தடைகள் அனைத்தும் படிப்படியாக குறைவதுடன், எதிர்காலத்தினை குறித்த நம்பிக்கையும் அதிகரிக்கும்.

மகரம்
குருவின் நட்சத்திர சஞ்சாரத்தினால் மகர ராசியினருக்கு புதிய மாற்றங்கள் ஏற்படுவதுடன், வேலை மற்றும் குடும்பத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.
தொழில் வாழ்க்கையில் பல பொறுப்புகள் இருப்பதுடன், தாமதமாக இருந்த வேலைகள் அனைத்தும் முடிவிற்கு வரும்
பணி செய்யும் இடத்தில் முயற்சிக்கு நல்ல பலன் கிடைப்பதுடன், புதிய திட்டங்களில் ஈடுபடுவதற்கும் இவை சாதகமான சூழலாக இருக்கும்.
வீட்டில் கருத்து வேறுபாடு குறைந்து அமைதியான சூழல் உருவாவதுடன், தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் இவற்றில் சமநிலையை ஏற்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். இந்த காலக்கட்டத்தில் பல்வேறு முன்னேற்றத்தினை பெறலாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |