சூரிய நட்சத்திர பெயர்ச்சி: 14 நாட்களுக்கு அதிர்ஷ்டம் பெறும் 3 ராசியினர்
Sun Nakshatra Peyarchi 2026: சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியினால் இன்று முதல் 14 நாட்களுக்கு அதிர்ஷ்டத்தினை பெறும் 3 ராசியினரை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி
பொதுவாக ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாக இருப்பவர் தான் சூரியன். மாதம் ஒருமுறை தனது ராசியினை மாற்றிக் கொள்வதுடன் அவ்வப்போது தனது நட்சத்திரத்தினையும் மாற்றுகின்றார்.
அவ்வாறு பெயர்ச்சி அடையும் போது அதன் தாக்கங்கள் அனைத்து ராசிகளுக்கும் காணப்படும். தற்போது சூரியன் துலாம் ராசியில் பயணித்து வருகின்றார்.
நேற்றைய தினம் சூரியன் சுவாசி நட்சத்திரத்தில் இருந்து விசாகம் நட்சத்திரத்திற்குள் நுழைந்த நிலையில், இந்த நட்சத்திர பெயர்ச்சியால் சில ராசியினர் அதிர்ஷ்டத்தினை பெறுகின்றனர்.
நவம்பர் 20ம் தேதி வரையில் இருக்கின்றார். இதற்கிடையே சூரியன் நவம்பர் 16ம் தேதி விருச்சிக ராசிக்குள் நுழைய உள்ளார். தற்போது சூரியன் நுழைந்துள்ள விசாக நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான் இருக்கின்றார்.
இப்பொழுது விசாக நட்சத்திரத்திற்குள் சூரியன் சென்றுள்ளதால் அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

கடகம்
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியினால் கடக ராசியினர் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவதுடன், குடும்பத்தினருடன் நேரத்தினை செலவிடும் வாய்ப்பு கிடைக்கின்றது.
பணியிடத்தில் உங்களது திறமையை நிரூபிக்க இந்த நேரத்தினை நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதிய நட்பினால் வியாபாரிகளுக்கு லாபம் கிடைப்பதுடன், தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத நிதி ஆதாயம் கிடைக்கும்.
ஆனால் நிதி தொடர்பான முடிவுகளை அவசரப்பட்டு எடுக்காமல், நிதானமாக எடுப்பது மிகவும் அவசியம்.

தனுசு
தனுசு ராசியினருக்கு இந்த சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியினால் பணியிடத்தில் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவதுடன், வேலையினை சிறப்பாக செய்தும் முடிப்பீர்கள்.
அதே போன்று வேலையை மாற்ற நினைத்தால் இக்காலக்கட்டத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்குமாம். வணிகத்தில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றத்தினை பெறுவதுடன், லாபத்தினையும் பெறுவீர்கள்.அதிர்ஷ்டத்தினை நம்பாமல் இந்த காலக்கட்டத்தில் கடினமாக உழைப்பினை மேற்கொண்டால் நல்ல பலனை பெற முடியும்.

மீனம்
மீன ராசியினருக்கு இந்த சூரியன் நட்சத்திர பெயர்ச்சியில் நிதி நிலை உயர்வதுடன், பணி செய்பவர்கள் தங்களது செயல்திறனை மேம்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றியாக முடிவதுடன், வணிகளுக்கு நல்ல லாபமும் கிடைக்கும். அதிர்ஷ்டத்தினால் எதிலும் வெற்றியை பெறுவீர்கள்.
அதிக வேலைப்பளு காரணமாக ஆரோக்கிய பிரச்சனையை சந்திக்க நேரிடும் என்பதால், உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |